சென்னை: தமிழ்நாடு முழுவதும் பள்ளி 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று முதல் டிச.23ஆம் தேதி வரையும், 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, டிச.19 முதல் டிச.23ஆம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில், பள்ளி மாணவ மாணவிகளுக்கான அரையாண்டு தேர்வுக்கான விடுமுறை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புப்படி, ” வரும் டிச.23ஆம் தேதி அரையாண்டு தேர்வு முடிவடைகிறது, அதற்கு அடுத்த நாளான டிச.24ஆம் தேதி முதல் ஜன.1ஆம் தேதி வரையில் உள்ள 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை முடிந்து ஜன. 2ஆம் தேதி முதல், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த 9 நாட்களில் டிச.25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழாவும், ஜனவரி 1ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு விழாவும்,வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசு பள்ளிக்கு ரூ.4.65 லட்சத்தில் சீர்வரிசை.. அசத்திய மக்கள்!