ETV Bharat / state

தமிழில் ஒரு மலையாள சினிமா: நூடுல்ஸ் நல்ல அனுபவத்தை கற்றுக்கொடுத்தது...இயக்குனர் மதன் பெருமிதம்! - ஷீலா ராஜ்குமார்

Noodles Movie: 'நூடுல்ஸ்' திரைப்படம் மக்கள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் நேர்மையான பாராட்டைப் பெற்றது பெரு மகிழ்ச்சி அளித்துள்ளது என இயக்குனர் அருவி மதன் தெரிவித்துள்ளார்.

noodles movie
தமிழில் ஒரு மலையாள சினிமா: நூடுல்ஸ் நல்ல அனுபவத்தை கற்றுக்கொடுத்தது...இயக்குனர் மதன் பெருமிதம்!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2023, 3:56 PM IST

சென்னை: நடிகர் மதன், அருவி படத்தின்‌ மூலமாக நல்ல நடிகர் என்று பாராட்டப்பட்டவர். அதனைத் தொடர்ந்து, பல்வேறு படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்துப் பிரபலமானவர். இந்த நிலையில், இவர் முதல்முறையாக இயக்கிய படம் நூடுல்ஸ். மலையாள சினிமாவை போல வித்தியாசமான கதைக்களம் மூலம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார். படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

தமிழ் சினிமாவில், தற்போது அதிகரித்து வரும் ஆக்ஷன் படங்களுக்கு மத்தியில் அத்திப்பூத்தாற் போல இப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு மனநிறைவு தந்த படமாக அமைந்தது. நடிகராக மட்டுமின்றி இயக்கத்திலும் கால் பதித்து, இந்த படத்தின் மூலம் ஓர் சிறந்த இயக்குனராகவும் முத்திரை பதித்துள்ளார். இதுநாள் வரை வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வந்த நடிகர் ஹரீஷ் உத்தமனை இந்த படத்தின் மூலம் அனைவரும் விரும்பி ரசிக்கும் ஒரு குடும்பத் தலைவனாக மாற்றியதே இயக்குனர் மதனுக்குக் கிடைத்த முதல் வெற்றி என்று சொல்லலாம்.

ஹரீஷ் உத்தமன் மட்டுமல்ல, நாயகி ஷீலா ராஜ்குமார் மற்றும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த மதன் வக்கீலாக நடித்திருந்த வசந்த் மாரிமுத்து, மேல் வீட்டுக்காரர் சங்கர் கதாபாத்திரத்தில் நடித்த திருநாவுக்கரசு, குழந்தை ஆழியா மற்றும் அனைத்து கதாபாத்திரங்களும் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவருமே அந்த கதாபாத்திரங்களாக மாறி நடிப்பில் நூறு சதவீத பங்களிப்பைக் கொடுத்திருந்தனர். சொல்லப்போனால் படம் பார்க்கும், ஒவ்வொருவருமே அந்த கதாபாத்திரங்களின் வாழ்க்கைக்கு அருகிலிருந்து பார்த்து அவர்களின் கஷ்டத்தை நாமே படுவது போல உணர வைக்கும் அளவிற்கு வெகு நேர்த்தியாக இப்படத்தை இயக்கியுள்ளார் மதன் தட்சிணாமூர்த்தி.

தனது நூடுல்ஸ் படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு குறித்து இயக்குநர் மதன் தட்சிணாமூர்த்தி கூறும்போது, “'நூடுல்ஸ்' மக்கள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும், நேர்மையான பாராட்டைப் பெற்றது பெரு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுத்துள்ள போதிலும் பெரிய படங்களின் வெளியீட்டுக்கு மத்தியில் வரக்கூடிய சிறிய படங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் நூடுல்ஸ் படத்திற்கும் பாதிப்பைக் கொடுத்தது எனவும், ஆயினும் சிறிய படங்களை வெளியிடும் சமயத்தில் நாம் வழக்கத்தை விடவும் கூடுதலாகச் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றிய ஒரு நல்ல புரிதல் கிடைக்கப் பெற்றது. எனவும் கூறினார்.

மேலும், நூடுல்ஸ் படத்தைப் பாராட்டிய சில தயாரிப்பாளர்கள், நூடுல்ஸ் குழுவினரை இதே போன்ற நல்ல படங்கள் செய்யவேண்டும் என வரவேற்று இருப்பது மேலும் மகிழ்ச்சியைத் தருகிறது எனவும், திரைத்துறையைச் சேர்ந்த பலரின் பாராட்டுகள் அடுத்த படத்திற்கான பொறுப்பையும் கவனத்தையும் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பரினீதி சோப்ரா - ராகவ் சத்தா திருமணம்! பாரம்பரிய சடங்குகளுடன் கோலாகல கொண்டாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.