ETV Bharat / state

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை - அமைச்சர் பொன்முடி - etv bharat

விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதில் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி
author img

By

Published : Aug 26, 2021, 4:06 PM IST

Updated : Aug 26, 2021, 4:50 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சியில் அரசு கலை அறிவியல் கல்லூரி, ரிஷிவந்தியத்தில் அரசு கலைக்கல்லூரி, சங்கராபுரத்தில் தொழில்நுட்ப கல்லூரி ஆகியவற்றை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்தார்.

மாணவர்களை சேர்ப்பதற்காக 64 ஆயிரத்து 377 இடங்கள் உருவாக்கப்பட்டன. நிர்வாக வசதிக்காக விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் ஒரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார்.

ஜெயலலிதா பெயரை மாற்றவில்லை

அதற்கு பதிலளித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "அதிக எண்ணிக்கையிலான பல்கலைக்கழகங்களை உருவாக்குவதால் எந்தவித பலனும் இல்லை. அதற்கு பதிலாக மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும். திமுக அரசு சென்னையில் இயங்கும் மீனவர் பல்கலைக்கழகத்திற்கும், இசை பல்கலைக்கழகத்திற்கும் ஜெயலலிதா பெயரை மாற்றவில்லை. இதில் எந்தவித காழ்ப்புணர்ச்சி உடனும் செயல்படவில்லை.

கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதால் மாணவர்களின் கல்விக்கான தரம் உயர்த்தப்படும். எந்தவித நிதியும் ஒதுக்காமல் 7 ஏக்கர் இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் அண்ணாமலை பல்கலைக்கழகம் அனைத்துவித வசதிகளுடனும் 2,000 ஏக்கர் பரப்பளவில் ஆராய்ச்சி உள்ளிட்ட படிப்புகள் உள்ளன" என்றார்.

உள்நோக்கம் இல்லை

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதில் அரசிற்கு எந்தவித உள்நோக்கமும் கிடையாது. அப்படி மாற்ற வேண்டும் என நினைத்தால் அம்மா உணவகத்தின் பெயரை மாற்றி இருப்போம்" என்றார்.

இறுதியாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான சட்டப்பேரவை உறுப்பினர்கள் விழுப்புரம் பல்கலைக்கழகத்தை இணைக்கும் முடிவினை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிங்க: ’தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களே மாறி மாறி ஆட்சிக்கு வரும்’- செங்கோட்டையன்

Last Updated : Aug 26, 2021, 4:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.