தமிழ்நாடு முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சிறையிலிருந்து வந்த பிறகு அதிமுகவில் சசிகலா இணைய வாய்ப்பில்லை. அவருக்கு கட்சியில் இடமும் இல்லை. அவர் வெளியில் வருவதால் அதிமுகவில் எந்தவித தாக்கமும் ஏற்படாது.
சசிகலா குறித்து அதிமுக பொதுக்குழுவில் ஏற்கனவே தெளிவாக முடிவெடுக்கப்பட்டுவிட்டது. அவரை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியாகும் தகவல் தவறானது. அமமுகவில் இருந்தவர்கள் அதிமுகவிற்கு வந்துவிட்டனர். தற்போது அக்கட்சியில் டிடிவி தினகரன் மட்டுமே இருக்கிறார்” என்றார்.