சென்னை: தாம்பரம் கிருஸ்துவ கல்லூரியில் நடைபெறும் புகைபட கண்காட்சியை மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொங்கி வைத்தார். பின்னர் பேட்டியளித்த அவர்,கேரளாவில் தக்காளி காய்ச்சல் என்பது இல்லை என தெரிவிக்கபட்டுள்ளது. கைகால்களில் நுண் கிருமிகளால் ஏற்படும் நோயே வந்துள்ளது. அதுவும் கட்டுபாட்டில் இருப்பதாக கேரளா தெரிவித்துள்ளது என அவர் கூறினார்.
அவர், தமிழகத்தில் அந்த மாதிரியான எந்த பாதிப்பும் இல்லை. ஒவ்வொரு பருவத்திலும் ஏற்படும் காய்ச்சல்தான். பொதுவாக வருவதுதான். அதற்கும் போதிய முன் ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளதாக நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் அவர் 2015 2017 ம் ஆண்டு டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் உச்சத்தில் இருந்தது. ஆனால் இந்தாண்டு டெங்கு பாதிப்பு மிக குறைவாக உள்ளது. அதோடு ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்ததை போல் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டாலும் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.தற்போது 82 பேர் மட்டுமே பாதிக்கபட்டுள்ளனர்.
ஆனாலும் கரோனா பாதிப்பால் மக்கள் டெங்குவை மறந்திருப்பதால் நல்ல நீர் கொசு உண்டாகாமல் இருக்க டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதியதாக 36 பேருக்கு கரோனா பாதிப்பு!