கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் தமிழ்நாடு அரசு பல்வேறு வித கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்துள்ளது. திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை, வழிபாட்டுத் தலங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி, மாநகரப் பேருந்துகளில் உட்கார்ந்து மட்டுமே பயணிக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு விதக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் டாஸ்மாக், பார்கள் போன்றவற்றுக்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இது மதுப்பிரியர்களுக்கு ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா அதிகரிக்கும் நிலையில் கோவில்களில் மீண்டும் கட்டுப்பாடு