ETV Bharat / state

21 அடிக்கு ஏறிய நீர்மட்டம்... செம்பரம்பாக்கம் ஏரியை கண்காணிக்கும் பொதுப்பணித் துறை...!

சென்னை: கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வரும் நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், பொதுப்பணித் துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

nivar cyclone bring heavy rainfall and chemparampaakkam lake rises to 21 feet

author img

By

Published : Nov 25, 2020, 6:17 AM IST

Updated : Nov 25, 2020, 6:59 AM IST

வங்கக் கடலில் உருவாகியுள்ள 'நிவர்' புயல் காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயரத் தொடங்கியிருக்கிறது.

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி 21அடியை கடந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 24 அடியாகும்.

இந்நிலையில் பொதுப்பணித் துறையினர் தீவிரமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தினை கண்காணித்து வருகின்றனர்.

மேலும் 22 அடிக்கு மேல் நீர் உயர்ந்தால் மட்டுமே செம்பரபாக்கம் ஏரி திறக்கப்படும். அதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கடலுக்குச் சென்று கரை திரும்பாத 200க்கும் மேற்பட்ட மீனவர்களின் நிலை என்ன?

Last Updated : Nov 25, 2020, 6:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.