ETV Bharat / state

9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி: முதலமைச்சரின் அறிவிப்புக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறும் கருத்துகளை அறியலாம்.

author img

By

Published : Feb 25, 2021, 10:51 PM IST

முதலமைச்சரின் அறிவிப்புக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு

தமிழ்நாட்டில் 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளதை நாம் மேலோட்டமாக பார்த்தால் மாணவர்கள் நலன் சார்ந்ததாக தான் தெரியும். ஆனால், கல்வியியல் நலன் சார்ந்து பார்த்தால் அது மாணவர்கள் நலன் சார்ந்தது அல்ல.

கற்றல் கற்பித்தல் செயல்பாடு என்பது வகுப்பறையில் தான் நடைபெற முடியும். கரோனா ஊரங்கு காலத்தில் வீட்டில் முடங்கி கிடந்த மாணவர்கள் இணையவழி மூலம் ஐந்து மாதங்களாக முழுமையாக கற்றுக்கொள்ள முடியவில்லை என்பது தான் பெரும்பாலான பெற்றோர்களின் புகாராக இருக்கிறது. உலகளவில் மாணவர்கள் கற்றல் செயல்பாடு என்பது சாத்தியமில்லை எனக் கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகளை திறக்க அரசு அறிவித்தது. அரசு அறிவிப்பின்போது ஐந்து மாதங்கள் பள்ளிகள் நடத்தி, அதன் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என எதிர்பார்த்தனர். மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் அல்லது ஜூலை மாதம் நடத்துவார்கள் என எதிர்பார்த்தனர். இந்நிலையில் திடீரென தேர்வே இல்லை என அறிவிப்பு வெளியிடுவதற்கான எந்தவிதமான விளக்கத்தையும் அளிக்காமல், மாணவர்கள் நலன் சார்ந்தது என மட்டும் தான் கூறியுள்ளனர்.

பெற்றோர் கோரிக்கை விடுத்ததாகவும் கூறியுள்ளனர். அது குறித்தும், ஆசிரியர் அமைப்புகளுடன் கலந்துரையாடல் நடந்ததா என்பது குறித்தும் எதுவும் தெரிவிக்கவில்லை. பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தலைைமயில் பள்ளிகள் திறந்த பின்னர் பாடங்களை குறைப்பது குறித்தும், வேலை நாள்கள் குறித்தும் அறிவிப்பதற்கு குழு அமைத்தது. அந்தக்குழு அறிக்கையை கொடுத்ததா? என்பது குறித்தும் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல் பொது சுகாதாரத் துறையின் சார்பில் எந்த அறிக்கையும் அளித்ததா? என்பது குறித்தும், தேர்வு நடத்துவது குறித்தும் அறிக்கை அளித்ததா? என்பது குறித்தும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தேசியக்கல்விக் கொள்கை 2020 பள்ளிக் கல்விக்கும், உயர் கல்விக்கும் தொடர்பு இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் உள்ளது. பள்ளிக்கல்வி என்பது வேலை வாய்ப்பிற்கான திறன்களை அளிக்கும் இடமாகவும், உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்றால் தேசிய தேர்வு முகமை நடத்தக்கூடிய தேர்வில் தகுதி பெற்றால் தான் முடியும் என்ற சூழலை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

அதற்கு ஒரு வகையில் பள்ளிக்கல்வியை சீரழிக்கும் வகையில் இந்த அறிவிப்பு இருக்கிறதா? என்ற சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய சூழல் உள்ளது. மாணவர்கள் எல்லா வகுப்பினை திறந்து செயல்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு சிக்கல் வந்தால் அதற்கான வழிகாட்டுதல்களை ஆசிரியர்களுக்கு கொடுப்பது, பொதுசுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்களை பெற்ற பள்ளிகளை குறைந்தது ஐந்து மாதம் நடத்த வேண்டும். அந்தப் பாடங்களின் அடிப்படையில் மாணவர்களுக்கான தேர்வினை நடத்தி மதிப்பீட்டை தீர்மானிக்க வேண்டும்.

மாணவர்கள் சத்துணவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக பள்ளிக்கு வர வேண்டியிருக்கிறது. மாணவர்கள் பிற மாணவர்களுடன் சேர்ந்து விளையாடும்போது தான் சமூக செயல்பாட்டுடன் மாணவர்கள் வளர முடியும். எனவே பள்ளிகளை திறந்து அரசு நடத்த வேண்டும். தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில் கட்டணத்தை வசூல் செய்வதில் எந்தவிதமான ஈவு இரக்கம் இல்லாமல் ஊரடங்கு காலத்திலும் அவர்கள் கட்டணத்தை வசூல் செய்தனர்.

முதலமைச்சரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிரின்ஸ் கஜேந்திரபாபு

அது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அந்த வழக்கில் முதல் 40 சதவீதமும், பின்னர் 35 சதவீதமும், பள்ளிகள் திறந்த பின்னர் 35 சதவீதமும் வசூல் செய்யுங்கள் எனக் கூறினர். பள்ளிகள் திறந்த பின்னர் ஒரு மாதத்தில் கட்டணத்தை செலுத்த வேண்டும் என பெற்றோரை வலியுறுத்தி கட்டணத்தை வசூல் செய்தனர். அடுத்தக்கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்று வருகின்றன. 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி அறிவிக்கப்பட்டால் தான் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும். இந்த அறிவிப்பு கல்வியை வணிகமயமாக்குவதாகதான் கருத வேண்டியுள்ளது” எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது, 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ரத்து அறிவிப்பை தேர்தல் கால அறிவிப்பாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். மாணவர்கள் பள்ளிக்கு வந்துக் கொண்டிருக்கின்றனர். ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பள்ளிகள் நேரடியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாடத்திட்டங்களை குறைப்பதற்கு குழு அமைக்கப்பட்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இதுபோன்ற அறிவிப்பு தேவையற்றதாக கருதுகிறோம்.

மாணவர்களுக்கு குறைந்தப்பட்சம் பள்ளி அளவிலாவது தேர்வு நடத்தி அதில் வரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி அறிவித்திருக்கலாம். தேர்வு அட்டவணை வெளியிடுவதற்கு ஆறு மாதம் கால அவகாசம் எடுத்துக் கொண்டு அறிவித்திருக்கலாம். மாணவர்களின் கல்வியை பாதிக்கும் இந்த அறிவிப்பை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கடந்தாண்டு கரோனா உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில், தேர்வு ரத்துச் செய்ய வேண்டும் என கேட்டப்போது தமிழ்நாடு அரசு அளித்த பதில்களை திரும்பிப் பார்க்க வேண்டும்” எனக் கூறினார்.

மாணவர்கள் தேர்ச்சி குறித்து பேசிய பேட்ரிக் ரெய்மாண்ட்

மேலும், இது குறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறியதாவது, “9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்துள்ளார். இதன்படி, 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்பது தான் அர்த்தம். ஆசிரியர்கள், பெற்றோர்களை கருத்துக் கேட்காமல் அரசு அறிவித்துள்ளது.

பள்ளிகளை திறப்பதற்கு கருத்துக் கேட்ட அரசாங்கம் தேர்வுகளை ரத்துச் செய்ய கருத்துக் கேட்கவில்லை. 10 ஆம் வகுப்பு மாணவர் கடந்த ஆண்டும் தேர்வு எழுதவில்லை. இந்த ஆண்டும் 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதவில்லை. இந்த மாணவர்கள் அடுத்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வினை எவ்வாறு எழுதி, நீட், ஜெஇஇ தேர்வினை எதிர்கொள்வார்கள்.

பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார்

மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு இன்று மகிழ்ச்சியாக இருக்கலாம். எதிர்காலத்தில் மாணவர்களுக்கு பெரிதும் பாதிப்பினை ஏற்படுத்தும் என ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கவலைக் கொள்கின்றனர். எனவே குறைந்தப்பட்டசம் பள்ளி அளவிலாவது தேர்வினை நடத்தி மதிப்பெண்கள் போட வேண்டும்.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கரோனா என்று மதிப்பெண் போடுவீர்கள். அனைத்து பள்ளிகளையும் திறந்து மதிப்பெண்களை வழங்கி, அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பதை ஏற்றுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 9, 10, 11ஆம் வகுப்பு மாணாக்கர் ஆல்பாஸ்! - இபிஎஸ் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.