சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகம் முன் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்பாட்ட்த்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அனைத்து அரசு சாரா சேவை பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கச் செயலாளர் கார்த்திகேயன், "தமிழ்நாடு அரசு கரோனாவை சிறப்பாக கையாண்டு வருகிறது. ஆனால், கடந்த 15 மாதங்களாக கரோனா தொற்று காலத்தில் வேலை செய்துள்ளோம். அதனால் மனதளவிலும், உடலளவிலும் சோர்வடைந்துள்ளோம்.
2020ஆம் ஆண்டு கரோனா பரவல் சமயத்தில் அனைத்து அரசு சாரா சேவை பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களும் முதுநிலை குடியிருப்பு மருத்துவர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர். அதேபோல் தற்போதும் செய்ய வேண்டும். பட்டப்படிப்பு காலத்தை நீட்டிப்பு செய்யக் கூடாது. முதுநிலை குடியிருப்பு மருத்துவர்களுக்கான ஊதியத்தை அரசு ஆணை 94யின் படி வழங்க வேண்டும். கரோனா காலப் பணியை இரண்டு வருட கட்டாய சேவைக்குள் சேர்க்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : தனியார் மருத்துவமனைகளின் அட்டூழியம்: மருத்துவக் கழிவுகளால் மக்கள் வேதனை