ETV Bharat / state

தொடர்ந்து 26 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ் - development

உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் 2996 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 540 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.175 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் போன்ற 26 புதிய திட்டங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

26 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திய  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஷ்

author img

By

Published : Mar 31, 2023, 9:44 PM IST

சென்னை: கடந்த 20ஆம் தேதி தொடங்கப்பட்ட பட்ஜெட் கூட்டுத்தொடரின் தொடர்ச்சியாக இன்று பள்ளி கல்வித்துறையின் மானியக்கோரிக்கையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டார், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ். முதல்கட்டமாக 2996 அரசு நடுநிலைப்பள்ளிகள் மற்றும் 540 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 175 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும். இரண்டாவது கட்டமாக வரும் கல்வி ஆண்டில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7500 அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார்.

26 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திய  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஷ்
26 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஷ்

அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு 'மாதிரி பள்ளி’ என்ற அடிப்படையில் இந்த ஆண்டு 13 மாவட்டங்களுக்கு மாதிரிப் பள்ளிகள் உருவாக்க 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும்; மேலும் மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தம் வகையிலும் மாபெரும் வாசிப்பு இயக்கம் 10 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்கள் மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு விளையாட்டு சிறப்புப் பள்ளிகள் சுமார் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்றும் ;

மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பிற மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள் தங்களின் தாய் மொழியுடன் தங்கு தடையின்றி தமிழ் பேசவும் எழுதவும் ஏதுவாக ’தமிழ் மொழி கற்போம்’ என்ற திட்டம் தொடங்கப்படும் என்றும்;

15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழா 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு செயல்படும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்று என குறைந்தபட்சம் ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் வழங்கப்படும் என பல்வேறு திட்டங்களை பேரவையில் அறிமுகப்படுத்தினார்.

26 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

இதனைத்தொடர்ந்து அரசுப்பள்ளிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ’எண்ணும் எழுத்தும் திட்டத்தை’ அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறப்பாக செயல்படுத்திட 8 கோடி மதிப்பீட்டில் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்படவும்; ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தெரிவு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பணியில் சேர்வதற்கு முன்னர் 15 நாள் கற்றல் கற்பித்தல் மற்றும் அடிப்படை நிர்வாகப் பயிற்சிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தரம் உயர்த்தப்படும் என்றும்; வரலாறு, வணிகவியல் போன்ற பாடப்பிரிவுகள் இல்லாத அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிப்படியாக மூன்றாம் பாடப்பிரிவு உருவாக்கப்படும் இதுமட்டுமின்றி சிறைச்சாலைகளில் முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 1249 சிறைவாசிகளுக்கும் அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் கற்போர் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படும் எனவும்; இளைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் 30 லட்சம் மதிப்பீட்டில் தற்போது நடத்தப்படும் என்றும்; ஐந்து இலக்கியத் திருவிழாக்களுடன் இணைந்து இளைஞர் இலக்கியத் திருவிழா மற்றும் பாரம்பரியம் மிக்க தேசிய நூலகமான கன்னிமாரா பொது நூலகத்தில், போட்டித் தேர்வு மாணவர்கள், குழந்தைகள், சொந்த நூல்கள் படிக்கும் மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு பிரிவுகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து 15 கோடி மதிப்பீட்டில் அனைத்து மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் முழு நேர கிளை நூலகங்கள் படிப்படியாக ஆண்டுதோறும் வாசகர்கள் வசதிக்கேற்ப புதுப்பிக்கப்படும். முதற்கட்டமாக 20 மாவட்ட மைய நூலகங்களும் 30 முழு நேர கிளை நூலகங்களும் மறு சீரமைக்கப்படும் என உறுதியளித்துள்ளார், பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

ஆண்டுதோறும் ரூ.76.லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்பம் சார்ந்த வசதிகள் அனைத்து வாசகர்களையும் சென்றடையும் வகையில் அவற்றை கையாளுவது குறித்து நூலகர்களுக்கு தொடர் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும்; ரூ.5 கோடி மதிப்பீட்டில் கன்னிமாரா நூலகத்தில் நவீன வசதிகளுடன் சிறப்புப் பிரிவு விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும்; பாடநூல் கழகத்தை மறுசீரமைக்க மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் பணிகள் கற்பித்தல் சவால்கள் வாசிப்பு பழக்க மேம்பாடு ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் சீரமைக்கப்படும் என புதிய 26 கோரிக்கைகளை மானியக்கோரிக்கையின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: திறமையற்ற முதலமைச்சரால் தமிழ்நாடு காவல்துறை திறமையற்று திகழ்கிறது - சி.வி. சண்முகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.