ETV Bharat / state

மணலி பகுதியில் வெள்ள நீரில் கலந்த கச்சா எண்ணெய் கழிவுகள் கலந்த விவகாரம்: நாளை அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு! - சென்னை செய்திகள்

National Green Tribunal: சென்னையில் வெள்ள நீரில் கச்சா எண்னெய் கழிவுகள் கலந்த விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாயம் தொடர்ந்த வழக்கில் எண்ணெய் நிறுவனம் மற்றும் தமிழக அரசு நாளை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

National Green Tribunal has registered a case on the issue of crude oil mixed with rain floods
மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 12:07 PM IST

Updated : Dec 8, 2023, 2:53 PM IST

சென்னை: மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறிய எண்ணெய் கழிவுகள். மழை நீரில் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறித்து, தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

டிசம்பர் 4ஆம் தேதி ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பெரும்பாலான இடங்கள் தொடர் மழை காரணமாக வெள்ளக்காடாக திகழ்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு, மத்திய அரசு, ராணுவத்தினர், அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் என அனைத்து தரப்பினரும் தேவையான அடிப்படை உதவிகளை செய்து வருகின்றனர்.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சில இடங்களில் மழை நீருடன் சாக்கடை கழிவுகளும் கலந்து வருவதால், பல்வேறு தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மீட்புப் பணிகள் அரசால் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மணலியில் செயல்பட்டு வரும் சிபிசிஎல் நிறுவனம் எல்பிஜி, பெட்ரோல், விமான எரிபொருள் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களை சுத்திகரித்து, தமிழ்நாட்டிற்கு வழங்கி வருகிறது. இடைவிடாது பெய்த கனமழை காரணமாக, சுத்திகரிப்பு நிலையத்திற்குள் வெள்ள நீர் புகுந்து, சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த எண்ணெய் கழிவுகள் மழைநீரில் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் கடுமையான துர்நாற்றமும் வீசி வருகிறது.

இதனால் குடியிருப்புவாசிகள் வெளியேற முடியாமல் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இது குறித்து பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில், தென்மண்டல பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கோர்லபாடி அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

ஊட்டி ஏரியில் கட்டுமானம் மேற்கொள்வது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, சென்னையில் வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் குறித்து தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்துள்ளதா, தீர்வு என்ன என எண்ணெய் நிறுவனங்களின் கருத்துக்களை பெற்று தெரிவிப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் விளக்கம் அளிக்க பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளது.

மேலும், வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதாக தமிழக அரசு தெரிவித்த நிலையில் வழக்கின் விசாரணையை பசுமைத் தீர்ப்பாயம் நாளை தள்ளிவைத்துள்ளது.

இதையும் படிங்க: அம்பத்தூரில் வெள்ளம் சூழ்ந்த தொழிற்சாலைகள்.. மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்த தொழிலாளர்கள்!

Last Updated : Dec 8, 2023, 2:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.