சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நபார்டு வங்கியின் தலைமை பொதுமேலாளர் எஸ். செல்வராஜ் மரியாதை நிமித்தமாக நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 02) சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர்களுடன், தலைமைச் செயலர் க.சண்முகம், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கிருஷ்ணன், நபார்டு வங்கியின் பொதுமேலாளர் பிஜூ என். குரூப் ஆகியோரும் உடனிருந்தனர்.