ETV Bharat / state

சென்னையில் மாநகர் பேருந்துகள் முழுமையாக இயக்கம் - எம்டிசி மேலாண் இயக்குநர் தகவல்! - சென்னை செய்திகள்

TN Bus Strike: சென்னையில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகிறது என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

MTC Managing Director Alby John said Buses are fully running in Chennai
சென்னையில் பேருந்துகள் முழுமையாக இயக்கம் - எம்டிசி மேலாண் இயக்குநர் தகவல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 8:10 AM IST

சென்னை: ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், ஜனவரி 9ஆம் தேதியான இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

இந்த நிலையில், நேற்று (ஜன.8) மீண்டும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்து தொழிலாளர்களிம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக நிதித் துறையுடன் கலந்து ஆலோசித்துதான் முடிவு எடுக்க முடியும் என்றும், ஆகையால் ஜன.10ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தெரிவித்தார். மேலும் அனைத்து கோரிக்கையையும் ஒரே நாளில் எட்டிவிட முடியாது, இது தொடர்பாக பேசி முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில், திட்டமிட்டபடி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு முதலே வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கியது. இந்நிலையில், சென்னையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, சென்னை மாநகரில் அனைத்து பேருந்துகளும் இயங்குவதாக எம்டிசி மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று (ஜன.9) அனைத்து பேருந்துகளும் அட்டவணைப்படி தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து பணிமனைகளில் இருந்து, அனைத்து வழித்தடங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகிறது.

பயணிகள் பேருந்து இயக்கம் தொடர்பாக எந்தவித அச்சமும் இன்றி பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், அனைத்து பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் இயக்கத்தினை மாநகர் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் முழுமையாக கண்காணித்து வருகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்.. தொ.மு.ச அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.