ETV Bharat / state

'கேந்திரிய வித்யாலயாவில் தமிழை கட்டாயமாக்குங்கள்' - ஒன்றிய அமைச்சரிடம் திருச்சி சிவா வலியுறுத்தல் - kendriya vidyalaya

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்பப் பாடமாக இருந்த தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது குறித்து தீர்வு காண, மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா, ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை வலியுறுத்தியுள்ளார்.

siva
trichy
author img

By

Published : Jul 9, 2021, 4:35 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஒரு மொழிப் பாடமாக இல்லாததை ஏற்கனவே மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி கேள்வி ஏழுப்பினார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக, இப்பிரச்னையை தீர்ப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அப்போதைய ஒன்றிய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், கேந்திரிய வித்யாலயாவில் விருப்பப் பாடமாக இருந்த தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது குறித்து தீர்வு காண, தற்போதைய ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திருச்சி சிவா எம்.பி., கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், " அண்மையில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை சி.பி.எஸ்.இ., இணையத்தில் தரவிறக்கிக்கொள்ள பதிவேற்றம் செய்தபோது அதில் தமிழ் விடுபட்டுள்ளது. மேலும், 11, 12ஆம் வகுப்பில் ஒரு மாணவர் தாய்மொழியை (தமிழ்) இரண்டாவது மொழியாகப் படிப்பதற்குப் பதில் ‘பயன்பாட்டுக் கணிதவியல்’ போன்ற துணை பாடங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம் என்பதும் தாய்மொழியைப் பயில்வதைத் தவிர்க்கச் செய்வதாக உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ளூர் மாணவர்கள் தங்கள் தாய்மொழியைப் பயில்வதற்குரிய வகையில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கி தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.