ETV Bharat / state

மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக குண்டும், குழியுமாக மாறிய தாம்பரம் - முடிச்சூர் சாலை..! சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு! - road work

Motorists request to repair the road: தாம்பரம் - முடிச்சூர் பிரதான சாலை குண்டும் குழியாக மாறியதால் சாலையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருவதாகவும், விபத்துக்கள் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

tambaram mudichur salai
குண்டும், குழியுமாக மாறிய தாம்பரம் - முடிச்சூர் சாலை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 9:08 AM IST

குண்டும், குழியுமாக மாறிய தாம்பரம் - முடிச்சூர் சாலை

சென்னை: தாம்பரம் - முடிச்சூர் பிரதான சாலையானது தாம்பரத்தில் இருந்து மண்ணிவாக்கம் வரை சுமார் 7 கிலோமீட்டர் தூரம் கொண்டது. இந்த சாலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதாக கூறி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்காமல் இருந்து வருகின்றனர்.

இந்த சாலையை தினசரி ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சிதலமடைந்து கிடக்கும் சாலையில் அடிக்கடி விபத்துக்கள், ஏற்பட்டு உயிரிழப்புகள் நடக்கின்றன. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், தற்போது வரை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சிறு மழைக்கே முடிச்சூர் மேம்பாலம் அருகே இருக்கக் கூடிய இருபுற சாலைகளும் குண்டும் குழியுமாக மாறி, மழைநீர் தேங்கி நிற்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பெரும் மழைக்கு முன்பே கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணியை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

முன்னதாக, சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், "பெருநகர சென்னை மாநகராட்சியில் 388 கிலோ மீட்டர் நீளத்திற்கு 471 பேருந்து தட சாலைகள், 5 ஆயிரத்து 270 கிலோ மீட்டர் நீளத்திற்கு, 34 ஆயிரத்து 640 உட்புறச் சாலைகள் என மொத்தம் 5 ஆயிரத்து 658 கிலோ மீட்டர் நீளத்தில் 35 ஆயிரத்து 111 சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 5 ஆயிரத்து 509 எண்ணிக்கையிலான சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

ஆயிரத்து 934 சாலைகளில், ஆயிரத்து 670 சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு, 255 சாலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள 9 சாலைகளில் நிரந்தர சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். தற்காலிகமாக சாலை அமைக்க ஒப்படைக்கப்பட்டுள்ள 527 சாலைகளில் 294 சாலைப் பணிகள் முடிவு பெற்று, 211 சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மீதமுள்ள 22 சாலைப் பணிகள், வெகு விரைவில் மேற்கொள்ளப்படும். வெள்ள மேலாண்மை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 2 ஆயிரத்து 624 கிலோ மீட்டர் நீளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில், கடந்த 2 ஆண்டுகளில் 685.68 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிவு பெற்றுள்ளன. நடப்பாண்டில் 170.65 கிலோ மீட்டர் நீளத்தில் மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கப்பட்டுள்ளன" என சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:50 அடி நீள குச்சிகளுடன் தினசரி 92 கி.மீ ஆபத்து பயணம்.. பதைபதைக்கும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.