ETV Bharat / state

விரைவில் ஹார்வர்டு தமிழ் இருக்கை செயல்படத் தொடங்கும்..! - அகராதியியல் விழிப்புணர்வு

சென்னை: ஹார்வர்டு தமிழ் இருக்கை விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என நம்புவதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

பாண்டியராஜன்
author img

By

Published : Aug 7, 2019, 7:45 PM IST

தமிழ்நாடு அரசு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம் மற்றும் செல்லம்மாள் மகளிர் கல்லூரி இணைந்து அகராதியியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்றுவருகிறது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’சொற்கோவை இணையதளம் தொடங்கப்பட்ட பின் அதில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அதிகளவில் இணைந்து பணியாற்றி பயன்பெற வேண்டும் என கல்லூரிகள் தோறும் விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தி வருகின்றோம். இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் இளைஞர்கள் இதில் இணைய வேண்டும். மாதத்திற்கு 100 கல்லூரிகள் வீதம் 2000 கல்லூரிகளில் சொற்கோவை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு எனத் தனி தலைவர் மற்றும் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான பணிகள் நடைபெற்றுவருகின்றன. விரைவில் ஹார்வர்டு தமிழ் இருக்கை செயல்படத் தொடங்கும் என நம்புகிறேன். கிருஷ்ணகிரி அருகே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் சென்னையைப் பற்றிய பல தகவல்கள் இருக்கின்றன. இதன் மூலம் சென்னையின் வரலாறு வெறும் 375 ஆண்டுகள் அல்ல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பழமையானது என தெரியவந்துள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர் சந்திப்பு

மொழிதான் ஒரு மனிதனை முதன் முதலாக அடையாளப்படுத்தும். தமிழை இளமையாக வைத்திருக்க வேண்டியது இன்றைய இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது. அமெரிக்காவில் இரண்டு மாகாணங்களில் அலுவல் மொழியாக உள்ள தமிழை, 10 மாகாணங்களில் அலுவல் மொழியாக அங்கீகாரம் செய்ய வலியுறுத்தப்பட்டுவருகிறது” என்றார்.

Intro:தமிழ் சொற்கள் தொடர்பாக மலர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசின் அகராதியியல் விழிப்புணர்வு கருத்தரங்கு இந்த ஆண்டு இறுதிக்குள் 2000 கல்லூரிகளில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்

Body:தமிழக அரசு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம் மற்றும் செல்லம்மாள் மகளிர் கல்லூரி இணைந்து அகராதியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நடத்தி வருகிறது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்

சொற்கோவை இணையதளம் தொடங்கப்பட்ட பின் அதில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அதிக அளவில் இணைந்து பணியாற்ற பயன்பெற வேண்டும் என கல்லூரிகள் தோறும் அதில் விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தி வருகின்றோம் சொற்கோவை தொடங்கி வைக்கப்பட்ட பின் அது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெறும் ஏழாவது கல்லூரி இது என்றார் மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் இளைஞர்கள் இதில் இணைய வேண்டும் என்றும் மாதத்திற்கு 100 கல்லூரிகள் விதம் இந்த ஆண்டு இறுதிக்குள் 2000 கல்லூரிகளில் சொற்கோவை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்

ஹார்வர்டு தமிழ் இருக்கை க்கு தனி தலைவர் மற்றும் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தனித் தமிழ் நூலகம் அமைக்கும் பணிகளுக்கு நடைபெற்று வருகிறது என்றும் சட்டம் ஒரு மாதம் துவங்கும் கல்வியாண்டில் ஹார்வர்டு தமிழ் இருக்கை முழுமையாக செயல்பட துவங்கும் என நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்

மேலும் தமிழ் கல்வெட்டுகளை புத்தகங்களை அச்சிட்டு வெளியிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அது மேலும் தொடரும் என்றும் தெரிவித்தார் கிருஷ்ணகிரி அருகே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் சென்னையைப் பற்றிய பல தகவல்கள் இருப்பதாகவும் இதன் மூலம் சென்னையின் வரலாறு வெறும் 375 ஆண்டுகள் அல்ல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பழமையானது என்றும் சென்னை நகரம் என தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார்

முன்னதாக மேடையில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன் மொழி ஒரு மனிதனை முதன் முதலாக அடையாளப்படுத்தும் என்றும் தமிழ் இளமையாக வைத்திருக்க வேண்டியது இன்றைய இளைஞர்கள் கையில் இருக்கிறது என்றும் தெரிவித்தார் விழும் தமிழ் பல நாடுகளில் ஆட்சி மொழியாக இருக்கின்றன அலுவல் மொழியாக தமிழ் இருப்பது பெருமை படக்கூடிய என்றும் தெரிவித்தார்

அமெரிக்கா ஆகிய நாடுகளில் இரண்டு மாகாணங்களில் அலுவல் மொழியாக உள்ள தமிழை 10 மாகாணங்களில் அலுவல் மொழியாக அங்கீகாரம் செய்ய வலியுறுத்தி வருவதாக அமைச்சர் பாண்டிய ராஜன் தெரிவித்தார்.

Conclusion:இதில் சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் திரைப்பட நடிகர் ஆரி அவர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.