சென்னை: சட்டமன்றத்தில் ஜனவரி 9-ம் தேதி நடந்த ஆளுநர் ஆர்.என் ரவியின் உரையின் போது ஆளுநரின் விருந்தினர் தனது சபை மாடத்தில் இருந்து செல்போனில் வீடியோ எடுத்தார் என உரிமை மீறல் தீர்மானத்தை திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா கொண்டுவந்தார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, உரிமை மீறலுக்கான காரணம் இருப்பதால், தீர்மானத்தை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாக சபாநாயகர் தெரிவித்தார். மேலும், இனி வரும் காலங்களில் ஆளுநர் இருக்கையில் இருக்கும் போது உறுப்பினர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அப்பாவு அறிவுரை செய்தார்.
நேற்று முன் தினம் எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை. ஒரு போதும் ஆளுநர் பேசும் போது அவருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவை உறுப்பினர்கள் நடக்கக் கூடாது என அப்பாவு கூறினார்.
இதையும் படிங்க: "நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது கண்டிக்கத்தக்கது" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம்!