சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மகளிர் அணி நடத்தும் ‘மகளிர் உரிமை மாநாட்டில்’ கலந்து கொள்ள சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை விமான நிலையத்திற்குச் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றார்.
-
சென்னையில் நாளை மாலை நடைபெறவுள்ள மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருமதி சோனியா காந்தி மற்றும் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி ஆகியோரை மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் சென்னை விமான… pic.twitter.com/UEd0HtdL6D
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">சென்னையில் நாளை மாலை நடைபெறவுள்ள மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருமதி சோனியா காந்தி மற்றும் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி ஆகியோரை மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் சென்னை விமான… pic.twitter.com/UEd0HtdL6D
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 13, 2023சென்னையில் நாளை மாலை நடைபெறவுள்ள மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருமதி சோனியா காந்தி மற்றும் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி ஆகியோரை மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் சென்னை விமான… pic.twitter.com/UEd0HtdL6D
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 13, 2023
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மகளிரணி சார்பில், ‘மகளிர் உரிமை மாநாடு’ இன்று (அக்.14) நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும், மாநாடு நடைபெறும் இடத்தில் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து, மாநாடு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இந்த மாநாட்டையொட்டி ஒய்.எம்.சி.ஏ. திடலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை விமான நிலையத்திற்குச் சென்று முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களுக்கு புத்தகம் வழங்கி வரவேற்றார்.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் தொடரும் அநீதி..! சாதிய பாகுபாட்டால் ஊராட்சி தலைவராக பதவி ஏற்க விடாமல் தடுக்கும் உறுப்பினர்கள்!
இந்த சந்திப்பில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, பொன்முடி, கீதா ஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி மற்றும் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து விமான நிலையத்தில் திரண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தனியார் ஹோட்டலுக்குச் சென்றனர். இந்த மாநாட்டில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பல்வேறு முக்கிய அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதையும் படிங்க: 110 ஆவது ஆண்டை கொண்டாடும் இந்திய சினிமா.. வண்ண விளக்குகளில் ஜொலிக்கும் ராமோஜி ஃபிலிம் சிட்டி!