ETV Bharat / state

'கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்' - ஸ்டாலின்

சென்னை: கலை மற்றும் அறிவியல், பொறியியல் இறுதியாண்டு மாணவர்களின் கடைசி செமஸ்டர் தேர்வை ரத்து செய்து, ஏற்கனவே அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டம் வழங்கிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

MK stalin urges to cancel college final year semester exam
மு.க.ஸ்டாலின் அறிக்கை
author img

By

Published : Aug 13, 2020, 9:02 PM IST

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "மத்திய பாஜக அரசு 'ஈகோ' பார்க்காமல் மாநிலங்களில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாநில அரசுகளே முடிவு செய்து, இறுதியாண்டுத் தேர்வை ரத்து செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தி, மாணவர்களின் மனக்குமுறலையும் பெற்றோருக்கு இருக்கும் பேரழுத்தத்தையும் போக்கிட வேண்டும்.

மாநில அரசுகளுடன், மத்திய பாஜக அரசு நடத்தும் அதிகார யுத்தத்தில் கலை மற்றும் அறிவியல், பொறியியல் படிப்புகளில் இறுதியாண்டில் உள்ள மாணவர்கள் தாங்க முடியாத இன்னலுக்கும், துயரத்துக்கும் உள்ளாகி அவதிப்பட்டுக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

கரோனா பேரிடரால் இறுதியாண்டின் கடைசி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்கள் ஏற்கனவே பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்து அவர்களுக்கு முதலில் பட்டப்படிப்பை முடித்ததற்கான சான்றிதழ்களை வழங்கியிருக்க வேண்டிய நேரத்தில், மத்திய - மாநில அரசுகளின் அலட்சியத்தால் இன்று வரை தங்களுக்கு ‘டிகிரி கிடைக்குமா? எப்போது கிடைக்கும்?' என்ற கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இறுதியாண்டில் 'கேம்பஸ் இன்டர்வியூவில்' தேர்வானவர்கள், அவர்களுக்குக் கிடைத்த வேலைகளில் சேர முடியவில்லை. மாணவர்களுக்கு வேலை கொடுத்த பல நிறுவனங்கள் அதை ரத்தும் செய்துவிட்டன. பல நிறுவனங்கள் தேர்வு பெற்றவர்களை வேலையில் சேர்க்காமல் - 'டிகிரி சர்டிபிகேட் வாங்கிக்கொண்டு வாருங்கள்' என்று அவகாசம் கொடுத்து காத்திருக்கின்றன. அதனால் நடைபெற்ற 'கேம்பஸ் இன்டர்வியூ' அனைத்தும் அர்த்தமற்றதாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

டிகிரி முடித்து உயர் கல்வி கற்க நினைப்பவர்கள் விண்ணப்பிக்க முடியவில்லை. ஆகவே இறுதியாண்டு கடைசி செமஸ்டர் மாணவர்களின் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நேர்வழி சென்றால் நாளை நமதே - ஓபிஎஸ் ட்வீட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.