ETV Bharat / state

முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்! - முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

MK Stalin visit as Chief Minister to Secretariat, mk stalin signed first file as tamilnadu cm, முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் ஸ்டாலின், ஸ்டாலின் கையெழுத்திட்ட திட்டங்கள்
mk stalin signed first file as tamilnadu cm
author img

By

Published : May 7, 2021, 12:35 PM IST

Updated : May 7, 2021, 2:38 PM IST

12:24 May 07

சென்னை: முதலமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து, கரோனா நிவாரண நிதித் தொகையாக ரூ.4000 வழங்கும் திட்டத்தின் முதல் தவணைத் தொகையாக ரூ.2000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு கோப்பில் முதலமைச்சராக முதல் கையெழுத்திட்டார்.

முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து, கரோனா நிவாரண நிதித் தொகையாக ரூ.4000 வழங்கும் திட்டத்தின் முதல் தவணைத் தொகையாக ரூ.2000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு கோப்பில் முதலமைச்சராக முதல் கையெழுத்திட்டார். 

மேலும், ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வசதி, முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் கரோனா நோய்க்கு சிகிச்சை, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க தனி துறை ஆகியவற்றுக்கும் முதலமைச்சர் கையெழுத்திட்டார்.

அவர் கையெழுத்திட்ட திட்டங்கள் குறித்த முழு விவரங்கள் கீழ்வருமாறு:

  1. கரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்துவரும் நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழ்நாட்டு மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, சுமார் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் முதலமைச்சர் கையொப்பமிட்டுள்ளார்.
  2. தேர்தல் அறிக்கையில் அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் மே 16ஆம் தேதி முதல் குறைத்து விற்பனை செய்ய அரசாணை பிறப்பித்துள்ளார்கள்.
  3. தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினைச் செயலாக்கும் வகையில், தொடர்ந்து மாநிலம் முழுவதுமுள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் நாளை (மே 8) முதல் பயணம் செய்ய முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். இதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான 1,200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும்.
  4. தேர்தல் பரப்புரையின்போது மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று, அம்மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்கிற வாக்குறுதியை முதலமைச்சர் அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி, அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலை அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
  5. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழ்நாடு அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்க ஆணை பிறபிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து வகையான கரோனா நோய் சிகிச்சை செலவுகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மீள வழங்கும்.

Last Updated : May 7, 2021, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.