ETV Bharat / state

தேர்தல் வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்க மாட்டோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளிலிருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
author img

By

Published : Aug 16, 2021, 4:59 PM IST

சென்னை: கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று (ஆக.16) நடைபெற்றது.

சட்டப்பேரவைக் கூட்டம் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கடந்த 13ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இதனைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் (ஆக.14) தமிழ்நாட்டில் முதல் முறையாக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

மு.க.ஸ்டாலின் பேச்சு

தேர்தல் வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்க மாட்டோம்

அப்போது விவசாயக் கடன் மற்றும் நகைக் கடன்கள் குறித்த விவாதத்தின்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, "மாண்புமிகு பேரவைத் தலைவரே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இங்கே பல கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

அவற்றிற்குரிய விளக்கங்களை நம்முடைய அமைச்சர் பெருமக்கள் இங்கே தந்திருக்கிறார்கள். எனவே, நான் அதிகம் விளக்கம் சொல்ல விரும்பவில்லை.

ஒரே வரியிலேயே சொல்ல வேண்டுமென்றால், வெள்ளை அறிக்கை என்பது ஏதோ தேர்தல் நேரத்தில், திமுக வழங்கியிருக்கக்கூடிய உறுதிமொழிகள் எல்லாம் நிறைவேற்ற முடியாத நிலையிலேயே, பின்வாங்குவதற்கான முயற்சி என்ற பொருள்பட அவர் ஒரு கருத்தை எடுத்துப் பேசினார்.

நேற்றைக்கு முன்தினம் 100ஆவது நாள் காணக்கூடிய இந்த ஆட்சிக்குப் பாராட்டுத் தெரிவித்துப் பலர் இந்த அவையிலேயே பேசியபோது, நான் ஏற்புரை ஆற்றிப் பேசுகிறபோதுகூட சொன்னேன். எந்தக் காரணத்தைக் கொண்டும், நாங்கள் அளித்திருக்கக்கூடிய வாக்குறுதிகளிலிருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம் என்று.

பட்ஜெட் விவாதம்
பட்ஜெட் விவாதம்

மழுப்பலான பதிலைச் சொல்லியிருக்கின்றீர்களே!

நீங்கள் கேட்கலாம் - விவசாயிகளுடைய கடனைத் தள்ளுபடி செய்வோம்; நகைக் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்றெல்லாம் சொன்னீர்களே! அதற்கெல்லாம் மழுப்பலான பதிலைச் சொல்லியிருக்கின்றீர்களே! என்ற அந்த அடிப்படையிலேயே உறுப்பினர் உதயகுமார் இங்கே பேசியிருக்கலாம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உறுதியாகச் சொல்கிறேன். வெள்ளை அறிக்கையிலே தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

நிதிநிலை அறிக்கையிலேகூட, நிதியமைச்சர் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். அந்த நகைக்கடன் வழங்க வேண்டுமென்று நாங்கள் கருதினாலும், அதில் பல முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன. விவசாயிகளுடைய பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்வதைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, அதிலும் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன.

அதையெல்லாம் முறையாக சரிசெய்து, அதற்குப் பிறகு நிச்சயமாக அது வழங்கப்படும் என்ற உறுதிமொழியைச் சொல்லியிருக்கிறோம்.

பட்ஜெட் விவாதம்
பட்ஜெட் விவாதம்

பலவற்றை நீங்கள் நிறைவேற்றவில்லை

உங்கள் ஆட்சி நடைபெற்ற நேரத்தில், நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நீங்கள் தந்த வாக்குறுதிகளை, உறுதிமொழிகளை நாங்களும் மறக்கவில்லை. நாட்டு மக்களும் மறக்கவில்லை. அவற்றில் சிலவற்றை நிறைவேற்றியிருக்கிறீர்கள். பலவற்றை நீங்கள் நிறைவேற்றவில்லை. அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், இலவச செல்போன் தரப்படும் என்று சொன்னீர்கள்; தந்தீர்களா? ஆவின் பால் பாக்கெட் விலை 25 ரூபாய் என்று சொன்னீர்கள்; கொடுத்தீர்களா? ஏழை மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர் இலவசமாகத் தரப்படும் என்று சொன்னீர்களே?

யாருக்காவது கொடுத்திருக்கிறீர்களா? குறைந்த விலையிலேயே, அவசியமான மளிகைப் பொருட்கள் தரப்படும் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். அது கொடுக்கப்பட்டதா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வாக்குறுதி என்ன ஆயிற்று?

அனைவருக்கும் அம்மா வங்கி அட்டை கொடுப்போம் என்று உறுதி கொடுத்தீர்கள். அந்த வாக்குறுதி என்ன ஆயிற்று? கோ-ஆப்டெக்ஸ் துணிகள் வாங்க 500 ரூபாய் கூப்பன் தரப்படும் என்று சொன்னீர்கள், அதைக் கொடுத்தீர்களா?

பண்ணை மகளிர் குழுக்கள் அமைப்போம் என்றீர்கள், அதை அமைத்திருக்கிறீர்களா? அனைத்துப் பழங்களுக்குமான சிறப்பு அங்காடிகளை உருவாக்குவோம். கட்டித் தருவோம் என்று சொன்னீர்கள். எங்கேயாவது கட்டிக் கொடுத்திருக்கிறீர்களா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்துப் பொது இடங்களிலும் wi-fi வசதி ஏற்படுத்தித் தருவோம் என்று சொன்னீர்கள், அப்படி வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிற இடத்தை எங்கேயாவது காட்டுங்கள்.

டாக்டர் அம்பேத்கர் பவுன்டேஷன் அமைக்கப்படும் என்று சொன்னீர்கள். அதை அமைத்தீர்களா? பட்டு-ஜவுளிப் பூங்காவை உருவாக்குவோம் என்று சொன்னீர்களே, அதை எங்கேயாவது உருவாக்கியிருக்கிறீர்களா?

சென்னையிலே மோனோ- ரயில் விடப்படும் என்று சொன்னீர்கள். அதற்குப்பிறகு தலைவர் கலைஞர் கொண்டு வந்த மெட்ரோ ரயில் திட்டத்தைத்தான் நிறைவேற்றினீர்கள். இப்படி பெரிய பட்டியலே இருக்கின்றது.

பட்ஜெட் விவாதம்
பட்ஜெட் விவாதத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள்

உறுதிமொழிகளை நிறைவேற்றுவதுதான் எங்களுடைய லட்சியம்

விவசாயிகளுடைய பயிர்க்கடன், அதேபோன்று நகைக்கடனைப் பொறுத்தவரையில், எங்கெங்கு முறைகேடு நடந்திருக்கிறது, எங்கெங்கு தவறுகள் நடந்திருக்கின்றன என்பது குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் ,

தன்னுடைய துறை மானியக் கோரிக்கை விவாத்திற்குப் பதிலளித்துப் பேசுகிறபோது, நிச்சயமாக அவை குறித்து ஆதாரப்பூர்வமாக உங்களிடத்திலே எடுத்துச் சொல்வார் என்பதை நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.

பேரவைத் தலைவரே, உங்கள் ஆட்சியில் இதைச் செய்யவில்லையே, செய்யவில்லையே என்று நான் கேட்டதற்கு - அதேபோன்று நாங்களும் செய்யாமல் இருப்பதற்ககாக இதைச் சொல்கிறோம் என்று யாரும் கருத வேண்டாம்.

நிச்சயமாக, உறுதியாக – அதிலேயிருக்கக்கூடிய முறைகேடுகளை எல்லாம் களைந்து, இருக்கக்கூடிய நிதிப் பற்றாக்குறையையும் சரிசெய்து, உறுதியாக தேர்தல் நேரத்தில் வழங்கியிருக்கக்கூடிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதுதான் எங்களுடைய லட்சியம் – அதுதான் எங்களுடைய பணி. எனவே, யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் வரவேண்டிய அவசியம் இல்லை" என்றார்.

இதையும் படிங்க: பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய சாதனையாளர் ஸ்டாலின்! - வைகோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.