ETV Bharat / state

"சிலிண்டரை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைந்தாலும் ஆச்சரியம் இல்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சிலிண்டர் விலை குறைப்பை பார்க்கும் போது தேர்தல் நெருங்கிவிட்டதை உணர்த்துவது போல் இருப்பதாகவும் பெட்ரோல், டீசல் விலை குறைந்தாலும் ஆச்சரியம் இல்லை என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

mk Stalin
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 11:39 AM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஆக.31) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் மின்மாற்றி இருக்குமிடத்தைச் சுற்றி பாதுகாப்பினை ஏற்படுத்தும் வகையில், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்புகள் மற்றும் ரூ.18.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.1.9 கோடி மதிப்பீட்டில் 5 இடங்களில் மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள், நீர்வளத்துறையின் சார்பில் ரூ.91.36 கோடி மதிப்பீட்டில் தணிகாசலம் நகர் கால்வாயில் திறந்த மற்றும் மூடிய நீர்வழித்தடம் அமைக்கும் பணி மற்றும் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மண்டல உதவி ஆணையர் அலுவலகக் கட்டடம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மின்மாற்றியினைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்பு: பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் எஸ்.ஆர்.பி கோயில் வடக்கு பிரதான சாலை மற்றும் தெற்கு பிரதான சாலை, ஜவஹர் நகர் முதல் பிரதான சாலை ஆகிய 3 இடங்களில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் மின்மாற்றி இருக்குமிடத்தைச் சுற்றி பாதுகாப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் எஸ்.ஆர்.பி கோயில் வடக்கு பிரதான சாலையில் மின்மாற்றியினைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்பினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவிக நகர் பேருந்து நிலையம் அருகில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியின் கீழ், ரூ.15 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் பல்லவன் சாலையில் பெரியார் நகர், ஜவஹர் நகர் மற்றும் ஜிகேஎம் காலனி ஆகிய பகுதிகளுக்கு 1,110 மீட்டர் நீளத்திலும், ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் எஸ்.ஆர்.பி.கோயில் (வடக்கு).

ராமமூர்த்தி காலனியிலிருந்து பல்லவன் சாலை வரை 175 மீட்டர் நீளத்திலும், ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் ஆண்டாள் அவென்யூ பகுதியிலிருந்து பல்லவன் சாலை வரை 465 மீட்டர் நீளத்திலும் என மொத்தம் ரூ.18 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் 1,750 மீட்டர் நீளத்தில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

5 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கும் பணிக்கு அடிக்கல்: வி.வி.நகர் 2வது தெரு பூங்காவில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டிலும், பூம்புகார் நகர் 4வது தெரு பூங்காவில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலும், பெரியார் நகர் 29வது தெரு பூங்காவில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலும், ஜவஹர் நகர் 5வது பிரதான சாலை பூங்காவில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டிலும், செல்வி நகர் 5வது தெரு விளையாட்டு மைதானத்தில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 1 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 பூங்காக்கள் மற்றும் 1 விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் 5 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் (Sponge Park) அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இப்பூங்காக்களில் 5 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கப்படுவதுடன், பசுமையான செடிகள், புல்வெளிகள், சுற்றுச்சுவர், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை, இருக்கைகள், மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள், குடிநீர்வசதி, பாதுகாவலர் அறை உள்ளிட்ட பல்வேறு பணிகளும் மேற்கொள்ளப்படும்.

கொளத்தூரில் உள்ள அனிதா அச்சீவர்ஸ் அகாடமி விசிட்: கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் மாணவ, மாணவியர்களுக்கு TALLY பயிற்சி வகுப்புகள், பெண்களுக்கு தையல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடத்தை முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.

ஹரிதாஸ் சாலையில் உள்ள தாமரைக் குளம் பூங்கா விசிட்: தணிகாசலம் நகர் கால்வாயில் திறந்த மற்றும் மூடிய நீர்வழித்தடம் அமைக்கும் பணிகள் மற்றும் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உதவி ஆணையர் அலுவலகக் கட்டடம் கட்டும் பணி ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுதல்.

நீர்வளத்துறையின் சார்பில் ரூ.91 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் சென்னை - மாதவரம் மற்றும் அயனாவரம் வட்டங்களில் அமைந்துள்ள தணிகாசலம் நகர் கால்வாயில் திறந்த மற்றும் மூடிய நீர்வழித்தடம் அமைக்கும் பணிகள் மற்றும் கொளத்தூர் - நேர்மை நகரில் ரூ.2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 758.10 சதுர மீட்டர் பரப்பளவில் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மண்டல உதவி ஆணையர் அலுவலகக் கட்டடம் கட்டும் பணி ஆகியவற்றிற்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், "இந்தியா கூட்டணி இதுவரை 28 கட்சிகளுடன் உயர்ந்திருக்கிறது. அது இன்னும் உயர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மேலும் சிலிண்டர் விலை குறைப்பு பற்றிய கேள்விக்கு, அது தேர்தல் நெருங்குவதற்கான ஒரு அறிகுறி. மேலும் இதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை கூட குறைந்தாலும் ஆச்சரியமில்லை" எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர். அர.சக்கரபாணி, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் மீண்டும் விசாரணை.. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம்! - காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.