சென்னை: சென்னை மாநகரின் என்.எஸ்.சி. போஸ் சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம் , வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம், டெமலஸ் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, கொளத்தூர் - வேலவன் நகர் மற்றும் டெம்பிள் ஸ்கூல் ஆகிய இடங்களில் ரூ.167.08 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், ”மழைக்கால வெள்ள தடுப்பு பணிகள் திருப்திகரமாக உள்ளது. மழை அவ்வப்போது பெய்து வருவதால் வடிகால் பணிகள் தடைபட்டுள்ளது. குறைந்தபட்சம் 15 நாள்,அதிகபட்சம் 1 மாதத்திற்குள் பணிகள் முடிவடையும்.
எப்படிப்பட்ட மழை வந்தாலும் சமாளிக்கும் வகையில் பணிகள் உள்ளது” என தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி , துணை மேயர் மு. மகேஷ் குமார், ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: பணியின்போது மது அருந்தினால் கடும் நடவடிக்கை - போக்குவரத்து துறை எச்சரிக்கை