ETV Bharat / state

தடுப்பூசியை வீண் செய்தது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்! - கரோனா தடுப்பூசி

சென்னை: கரோனா தடுப்பூசியை வீண் செய்வதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தகவலறியும் உரிமை வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.

தடுப்பூசியை வீண் செய்தது குறித்து அமைச்சர் வியபாஸ்கர் விளக்கம்

author img

By

Published : Apr 20, 2021, 9:52 PM IST

சென்னை: கரோனா தடுப்பூசியை வீண் செய்வதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்ற தகவல் அறியும் உரிமை வெளியிட்டுள்ள அறிக்கை மருத்துவர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநில அளவில் வீணான கரோனா தடுப்பூசி டோஸ்கள் குறித்து இந்த சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு இந்த பதிலை அளித்துள்ளது.

இந்த அறிக்கையின் படி, நாடு முழுவதும் 44 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகள் வீணாகியுள்ளதாகவும், அதில் அதிகபட்சமாக தமிழ்நாடு 12.10 விழுக்காடு தடுப்பூசி மருந்துகளை வீண் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜனவரி 16 ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது..

இந்த நிலையில் தடுப்பூசி வீணாக்கியததாக கூறப்படுவதை பெரிதாக்க வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஏப்.20) கேட்டுக்கொண்டார். செய்தியாளரைச் சந்தித்த அவர் "6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மத்திய அரசின் கிடங்கில் இருந்து பெறப்பட்டு உள்ளது. கடந்த ஏப்.18ஆம் தேதி ஒரு லட்சம் கோவாக்ஷின் தடுப்பு ஊசிகள் தமிழ்நாடு வந்தடைந்தன" என்று கூறிய அவர், “இன்று வந்துள்ள 6 லட்சம் தடுப்பூசியில் உடன் சேர்த்து தமிழ்நாட்டில் தற்போது 10 லட்சம் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.

மேலும், பற்றாக்குறையுள்ள மாவட்டங்களுக்குத் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும். கரோனா தடுப்பூசி குறித்து வரும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்” என்று கூறினார். இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவ சங்கத்திற்கான பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் கூறுகையில், "இதற்கு காரணமே மத்திய அரசு தான். முதலில் 60 வயது நிரம்பிய முன்கள பணியாளர்களைத் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். பிறகு, தடுப்பூசி போடுவதில் பெரும்பாலானோருக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. இதனால், அதிக அளவிலான டோஸ்கள் வீணாகின. மத்திய அரசின் அவசரமே இதற்குக் காரணம்” எனக் குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து சுகாதார முதன்மை செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் கூறியதாவது "இதை பெரிதுபடுத்த தேவையில்லை. உதாரணமாக, சுகாதாரத் துறை 10 கோவிட் டோஸ்கள் கையில் இருந்தால், 6 நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். மீதமுள்ள 4 டோஸ்கள் வீணாகின்றன. எனினும், மக்களிடம் தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள நல்ல விழிப்புணர்வு இருக்கிறது. இனி வரும் காலங்களில் தடுப்பூசி மருந்துகள் வீண் போகாது" எனத் தெரிவித்தார்

சுகாதாரத் துறை அலுவலர் ஒருவர் இது குறித்து கூறுகையில், "கோவிட் டோஸ் வீணாக போக பல காரணம் இருந்தாலும், இந்த தடுப்பு மருந்து கள்ள சந்தைக்குப் போகாதது முக்கியமான காரணமாகும். கள்ளச் சந்தையில் விற்பனை நடந்திருந்தால் கரோனா தடுப்பூசிக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும்" என்றார்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி வீண் செய்ததில் தமிழ்நாடு முதலிடம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.