சென்னை: சீனாவின் ஹாங்சோவில் 4வது பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் வரும் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது . இதில் இந்தியா சார்பில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், தற்போது நடைபெற்று வரும் போட்டிகளில் கேனோ, பிளைண்ட் ஃபுட்பால், ரோயிங் மற்றும் டேக்வாண்டோ ஆகிய 5 விளையாட்டுகள் உள்பட 17 பிரிவுகளில் இந்தியா முதல் முறையாக பங்கேற்கிறது.
-
#AsianParaGames2022-இல் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
— M.K.Stalin (@mkstalin) October 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
அந்த வரிசையில், வட்டு எறிதல் போட்டியில் வெண்கலம் 🥉 வென்றுள்ள நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்துராஜா அவர்களுக்கு எனது பாராட்டுகள். முத்துராஜா மென்மேலும் சாதித்து அடுத்தடுத்த… https://t.co/JRKuUq8EkI
">#AsianParaGames2022-இல் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
— M.K.Stalin (@mkstalin) October 24, 2023
அந்த வரிசையில், வட்டு எறிதல் போட்டியில் வெண்கலம் 🥉 வென்றுள்ள நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்துராஜா அவர்களுக்கு எனது பாராட்டுகள். முத்துராஜா மென்மேலும் சாதித்து அடுத்தடுத்த… https://t.co/JRKuUq8EkI#AsianParaGames2022-இல் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
— M.K.Stalin (@mkstalin) October 24, 2023
அந்த வரிசையில், வட்டு எறிதல் போட்டியில் வெண்கலம் 🥉 வென்றுள்ள நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்துராஜா அவர்களுக்கு எனது பாராட்டுகள். முத்துராஜா மென்மேலும் சாதித்து அடுத்தடுத்த… https://t.co/JRKuUq8EkI
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான வட்டு ஏறிதல் F54/55/56 என்ற பிரிவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை இந்திய வீரர்கள் கைப்பற்றியுள்ளர். இந்த போட்டியில் நீரஜ் யாதவ் தங்கமும், யோகேஷ் கதுனியா வெள்ளி பதக்கமும், முத்துராஜா வெண்கலப் பதக்கமும் வென்று உள்ளனர். இதில் வெண்கல பதக்கம் வென்ற முத்துராஜா தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவு, "AsianParaGames2022-இல் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.அந்த வரிசையில், வட்டு எறிதல் போட்டியில் வெண்கலம் வென்றுள்ள நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்துராஜா அவர்களுக்கு எனது பாராட்டுகள். முத்துராஜா மென்மேலும் சாதித்து அடுத்தடுத்த போட்டிகளில் தங்கம் வெல்ல வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ்(X) பக்கத்தில் முத்துராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் "சீனாவில் நடைபெற்று வரும் #AsianParaGames2022-ல் வட்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள நம் தமிழ்நாட்டு வீரர் சகோதரர் முத்துராஜாவிற்கு வாழ்த்துகள்.
உயரம் தாண்டுதல் போட்டியை போலவே, வட்டு எறிதலிலும் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களையும் இந்திய வீரர்களே வென்றுள்ளார்கள். நம் மாற்றுத்திறன் வீரர்களின் இந்த சாதனை, விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் உத்வேகம் அளிக்கும். பதக்கம் வென்ற மூவருக்கும் பாராட்டுகள்" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: PAK VS AFG: அன்று பாகிஸ்தான்! இன்று ஆப்கானிஸ்தான்! சிறந்த அணிக்கு என்றும் அங்கீகாரம் கொடுக்கும் தமிழக ரசிகர்கள்!