சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்தில் புதிய முதலீடுகள் 15ஆயிரத்து 610 கோடி ரூபாய் மதிப்பிலான உங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 15ஆயிரத்து 610 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த புதிய முதலீட்டு திட்டங்கள் மூலம் 8ஆயிரத்து 776 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
தமிழகம் முழுவதும் பரவலாக புதிய முதலீடுகள் வர இருக்கிறது. மின்னணு வாகன தயாரிப்பு, கம்பி இல்லா தொழில்நுட்ப தொழிற்சாலை, ஜவுளித்துறை மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலை என எட்டு புதிய முதலீட்டு திட்டங்கள் வரவுள்ளன. மின்னு வாகன பயன்பாட்டை ஊக்கு விக்கும் வகையில் அந்த வாகனத்திற்கான சாலை வரியையும் அரசே செலுத்தும் வகையில் திருத்தும் மேற்கொள்ளபடவுள்ளது. மேற்கண்ட தொழில் நிறுவனங்களில் 80 விழுக்காடு தமிழர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீட் வழக்கில் மாணவச் செல்வங்களை திமுக அரசு ஏமாற்றுகிறது - ஈபிஎஸ் கண்டனம்