ETV Bharat / state

திமுகவில் போலி பேர்வழிகள் சிலர் உள்ளனர்... இன்னும் 2 நாட்களில்... - அமைச்சர் தா.மோ. அன்பரசன் எச்சரிக்கை - minister tha mo anbarasan urban local body election campaign speech in tambaram

திமுக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராகப் பணியாற்றினால், கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். திமுகவில் போலி பேர்வழிகள் சிலர் உள்ளனர். அவர்கள் இரண்டு நாட்களில் கண்டறியப்பட்டு திமுகவில் இருந்து நீக்கப்படுவார்கள் எனக் கடுமையான சொற்களால் அமைச்சர் தா.மோ. அன்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திமுகவில் போலி பேர்வழிகள் சிலர் உள்ளனர்.. இன்னும் இரண்டு நாட்களில் : அமைச்சர் தாமோ அன்பரசன் எச்சரிக்கை

author img

By

Published : Feb 10, 2022, 9:04 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பரப்புரை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒவ்வொரு பகுதியிலும், தங்களுக்குப் போட்டி இட வாய்ப்பு வழங்காத அரசியல் கட்சியினருக்குச் சவால்விடும் வகையில் அவர்கள் சார்ந்த கட்சிக்கு எதிராக சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் களத்தில் இறங்கி பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி என்று காணொலி வாயிலாக அனைத்து மாவட்டத்திலும் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஈடுபட்டு வருகின்றார்.

அமைச்சர் தாமோ அன்பரசன் எச்சரிக்கை
அமைச்சர் தா.மோ. அன்பரசன் எச்சரிக்கை

இதையும் படிங்க: ஓட்டு கேட்க வேண்டிய அவசியமே இல்லை - உறையூரில் உதயநிதி பேச்சு

இதனிடையே, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தாம்பரத்தில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி 49ஆவது வட்ட திமுக வேட்பாளர் காமராஜ், 50ஆவது வட்ட மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் யாக்கூப் ஆகியோரை குறு,சிறு, நடுத்தர தொழில்துறை மற்றும் ஊரகத்தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார்.

அமைச்சர் தா.மோ. அன்பரசன் எச்சரிக்கை

அப்போது பேசிய அமைச்சர் தாமோ அன்பரசன், "தேர்தலில் பலர் சீட் கிடைக்காத விரக்தியில் திமுக தலைமை அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து நிற்கின்றனர். கட்சியின் தலைமை அறிவித்த வேட்பாளருக்கு ஆதரவாகப் பணியாற்ற வேண்டுமே தவிர சுயேச்சையாக நிற்கும் மற்ற நபர்களுக்கு பணியாற்றக்கூடாது'' என அமைச்சர் கடுமையான சொற்களால் திட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், ''தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராகத் தேர்தல் வேலையில் ஈடுபட்டால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். திமுகவில் போலி பேர்வழிகள் சிலர் உள்ளனர். அவர்களை இரண்டு நாட்களில் கண்டறிந்து திமுகவில் இருந்து நீக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்" என அமைச்சர் தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: சூரியனுக்கு ஓட்டு போடலனா சோறு இல்லனு மிரட்டுங்க - உசுப்பேத்திய பொன்முடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.