ETV Bharat / state

தொழிற்சங்கங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்; போராட்ட அறிவிப்பை கைவிட அமைச்சர் வேண்டுகோள்..! - Pongal festival

Minister SS Sivasankar about TNSTC Protest: போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், பொங்கல் விடுமுறைகளுக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும், போராட்ட அறிவிப்பை கைவிடக் கோரியும் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Minister SS Sivasankar to call off TNSTC union protest notice
போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 11:49 AM IST

சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கத்தினர் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக, போக்குவரத்து துறை மேலாண்மை இயக்குநர்களிடம் கடிதம் வழங்கி உள்ளனர்.

இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டியும், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் இன்று (ஜன.3) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "அனைத்து போக்குவத்து தொழிற்சங்கங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றன.

கடந்த அதிமுக ஆட்சி, தமது காலத்தில் பதினான்காவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உரிய காலத்தில் முடிக்காமல் தொழிலாளர்களை நிர்கதியாக நிற்க வைத்தது, எந்த கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்று கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மிக முக்கியமாக, அதிமுக ஆட்சி காலத்தில் சீர்குலைக்கப்பட்ட ஊதிய விகிதம், மீண்டும் சீரமைக்கப்பட்டு "பே மேட்ரிஸ்", தனித்தனி ஊதிய விகிதம், 2.57 காரணி வழங்கப்படுகிறது.

ஊதியமும் 5 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தப்பட்டது. இது அத்தனையும் எந்த போராட்டமும் நடத்தாமல், எந்த ஒடுக்கு முறையையும் சந்திக்காமல் கிடைத்தவை. கடந்த ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை எவ்வளவு சீரழிக்கப்பட்டது என்பது எல்லோரும் அறிந்தது. மகளிர் கட்டணமில்லா பயணத்திற்கு இந்த ஆண்டு மட்டும் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஒதுக்கி, டீசல் மானியமாக ரூபாய் 2 ஆயிரம் கோடியும், மாணவர் இலவச பஸ் பயணத்திற்காக ரூபாய் ஆயிரத்து 500 கோடியும் ஒதுக்கீடு செய்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அரசாணை 36-ஐ பிறப்பித்து, போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் மூலம் போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக செயல்பட காரணமானவர் முதலமைச்சர். புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கி, புதிய பணியாளர்கள் நியமனத்திற்கு அனுமதி அளித்து துறை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தீபாவளி போனஸ் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் குறைத்து வழங்கப்பட்டதை, யாரும் கோரிக்கை வைக்காமலேயே மீண்டும் 20 சதவீதமாக உயர்த்தி ரூபாய் 16 ஆயிரத்து 800 வழங்கியதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். இதற்கும் எந்த போராட்டமும் நடத்தப்படவில்லை.

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு, வாரிசு அடிப்படையிலான பணி போன்றவைகளை இந்த அரசு நிறைவேற்றி தந்துள்ளது. தற்போது சென்னையில் வரலாறு காணாத அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் அதனால் பொதுமக்கள் சந்தித்துள்ள இழப்புகளை சீர் செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதை எல்லோரும் அறிவோம்.

பேரிடர் நேரத்தில் உடனடியாக களம் இறங்கி, பேருந்துகளை வழக்கம் போல் இயக்கி, மக்களின் வாழ்வு இயல்பு நிலைக்கு வர முன் நின்றவர்கள் நம் போக்குவரத்து துறை தொழிலாளர்கள். அதேபோல், தொழிற்சங்கங்களும் முதலமைச்சருக்கும், பொதுமக்களுக்கும் இந்த பேரிடர் நேரத்தில் உறுதுணையாக நிற்க அன்போடு வேண்டுகிறேன்.

எனவே, போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் உணர்ந்துகொண்டு பணியில் உள்ள தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்பதையும்

பொங்கல் விடுமுறைக்குப் பின்பு தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்னைகளும் தீர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். எனவே போராட்ட அறிவிப்பை கைவிட அன்போடு வேண்டுகிறேன்" என போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிடில் போராட்டம் உறுதி - போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.