ETV Bharat / state

அமைச்சர் சேகர்பாபு மகள் காதல் திருமண விவகாரம்: பொய் வழக்கு போடுவதாக மகனின் பெற்றோர் குற்றச்சாட்டு - சேகர் பாபுவின் மகள்

அமைச்சர் சேகர் பாபுவின் மகள் சதீஷ் என்ற வாலிபருடன் வீட்டைவிட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில், சதீஷின் குடும்பத்தினர் மீது தொடர்ந்து பொய் வழக்குப் போட்டு போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்வதாகப் பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 13, 2022, 7:02 AM IST

சென்னை: ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் சதீஷ் குமாரும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி ஆகியோரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இன்று காலை சதீஷ் குமாரின் சகோதரியான சங்கீதா என்பவரை ஓட்டேரி போலீசார் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவர் ஓட்டேரி பகுதியில் மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சங்கீதாவிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2 லட்ச ரூபாய் ஏலச்சீட்டு போட்டுள்ளார். 2 லட்ச ரூபாய் சீட்டை எடுத்துவிட்டு, அதன் பின்பு சுந்தர் சீட்டு கட்டாமல் 36,000 ரூபாய் பாக்கி வைத்துள்ளார்.

இதனால் சங்கீதா மருந்துக் கடைக்குச் சென்று சுந்தரிடம் பணத்தைக் கேட்டு ஆபாசமாக திட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 9ஆம் தேதி சங்கீதா மற்றும் அவரது கணவர் ஹரி மீண்டும் சென்று சுந்தரிடம் இருந்த 2000 ரூபாய் பணத்தைப் பறித்துவிட்டு மீதமுள்ள பணத்தைக் கேட்டு கட்டையால் தாக்கிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த சுந்தர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ஓட்டேரி போலீசாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் ஆபாசமாக பேசுதல், மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சங்கீதாவின் கணவர் ஹரியை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக சதீஷ்குமார், சங்கீதாவின் தந்தையான முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தனது மகன் அமைச்சர் சேகர் பாபுவின் மகளுடன் சென்று திருமணம் செய்து 8 மாதங்கள் ஆகிறது என்றும், அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும் தெரிவித்தார்.

ஆனால் சேகர் பாபுவின் அறிவுறுத்தலின் பேரில், தங்கள் குடும்பத்தார் மீது ஓட்டேரி போலீசார் தொடர்ந்து பொய் வழக்குகள் போட்டு சித்தரவதை செய்து வருவதாகவும், சேகர் பாபு மற்றும் போலீசாரின் பழிவாங்கும் செயல்களால் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் தன் மீதும், தனது சகோதரர் மீதும் வழக்கு தொடர்ந்தது அல்லாமல் இன்று எனது மகள் மீதும் பொய் வழக்கு ஒன்றைப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மேலும், தனக்கு படிக்கத் தெரியாது என்பதால் என்ன வழக்கு தனது மகள் மீது போட்டுள்ளார்கள் என்பதுகூட தனக்குத் தெரியவில்லை என்ற அவர், தனது மகளின் பிள்ளைகள் இருவரும் ஆதரவின்றி இருப்பதாகவும் தெரிவித்தார். தனது மகளின் கணவர் வெளியூருக்குச் சென்றுள்ள நிலையில் போலீசாரின் இந்த நடவடிக்கையால் செய்வதறியாது நிற்பதாகவும் அவர் கூறினார்.

அமைச்சர் சேகர்பாபு மகள் காதல் திருமண விவகாரம்: பொய் வழக்கு போடுவதாக மகனின் பெற்றோர் குற்றச்சாட்டு

இதையும் படிங்க: ரேஷன் துவரம் பருப்பில் முறைகேடா?.. மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.