ETV Bharat / state

செந்தில் பாலாஜி வழக்கு: சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி அமர்வு நீதிமன்றம் உத்தரவு!

Senthil Balaji case transferred to special court:எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கு விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு விசாரணைக்கு வரவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கு: சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி அமர்வு நீதிமன்றம் உத்தரவு!
செந்தில் பாலாஜி வழக்கு: சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி அமர்வு நீதிமன்றம் உத்தரவு!
author img

By

Published : Aug 17, 2023, 7:15 PM IST

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் கைது செய்யப்பட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சரியானது என உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்த பிறகு, ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். அதன் பின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆஜர்படுத்தபட்ட அவரை, ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

இதையும் படிங்க: அரசு மக்கள் தொடர்பு அதிகாரி (GPRO) என அழைக்க கோரிய வழக்கு தள்ளுபடி!

அன்றைய தினமே, செந்தில்பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றபத்திரிகையும், 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களையும் அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்தது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கு விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: parliament election 2024: வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி பாசறை: அனல் பறக்கும் தேர்தல் களம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.