ETV Bharat / state

நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்மார்ட் மீட்டர் அறிவிப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி

author img

By

Published : Apr 12, 2023, 10:02 PM IST

மின்துறை திட்டங்களின் நிலை பற்றிய தகவல்களுக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி துறை கொள்கை விளக்க குறிப்பு அளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: மின்துறை திட்டங்களின் நிலை பற்றிய தெளிவான தகவல்களை அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் தெரிவிக்க பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 3 கோடி மின் இணைப்புகளுக்கும் புதிய வடிவமைப்போடு, நவீன வசதிகளோடு கூடிய ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பல்வேறு திட்டங்களை முன்வைத்து பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 2022 - 2023ஆம் நிதி ஆண்டிற்கான வருவாய் இழப்பு ரூ.7825 கோடி என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிலிருந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு தரப்பட்டுள்ள கடன்களின் நிலுவைத் தொகையானது, ஒரு லட்சத்து 44 ஆயிரம் கோடி என்ற அளவில் உள்ளது. 2022 - 2023ஆம் நிதி ஆண்டில் மின் கட்டண மானியமாக ரூ.13,783.68 கோடியும், வருவாய் இழப்பினை ஈடு செய்வதற்கான மானியமாக 12,315.36 கோடியும், இதர நிதி உதவிக்காக ரூ. 437 கோடியும் தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது.

மேலும் தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகத்தின் தொடர் முயற்சி காரணமாக தமிழ்நாடு, ஒரு வருட காலத்திற்கான கடனுக்கான வட்டியை ரூ.148 கோடி வரை சேமித்துள்ளது” எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், "ஸ்மார்ட் மீட்டர் என்பது நவீன காலத்திற்கு ஏற்ப புதிய வடிவமைப்போடு அமைக்க வேண்டும் என்பது மின்சார வாரியத்தினுடைய இலக்கு. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத அளவிற்கு புதிய வடிவமைப்போடு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான டெண்டர் தயாரிப்பிற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்றுள்ளன.

அதேபோல, சென்னையில் புதைவடை கம்பிகள் அமைக்கும் பணிகளும் விரைவில் முடிக்கப்படும். பின்னர் தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தினால் முடிக்கப்பட்ட பணிகளின் விவரங்கள் மற்றும் பணிகள் நடைபெற்று வருகின்ற திட்டங்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட அமைச்சர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக புதிதாக பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அலுவலர்கள் அந்தந்த தொகுதிக்குட்பட்ட சம்பந்தப்பட்ட அமைச்சர், எம்பி, எம்எல்ஏக்களை தொடர்ந்து சந்தித்து முடிக்கப்பட்ட பணிகள், முடிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து தெரிவிக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் எவ்வித குழப்பங்களும் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு.

இதன் காரணமாக அடுத்தடுத்து மக்களின் கோரிக்கைகள் விரைவில் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு நிலவும். இதனால் தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் சூழல் அதிகளவில் ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் 19 புதிய அறிவிப்புகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.