ETV Bharat / state

'அதிமுக மீண்டும் ஆட்சியில் அமர்வதை யாராலும் தடுக்க முடியாது'- அமைச்சர் செங்கோட்டையன்

அதிமுக மீண்டும் ஆட்சியில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரவித்துள்ளார்.

minister senkottaiyan
'அதிமுக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்வதை யாராலும் தடுக்க முடியாது'- அமைச்சர் செங்கோட்டையன்
author img

By

Published : Dec 14, 2020, 3:49 PM IST

சென்னை: அதிமுக மீண்டும் ஆட்சியில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரவித்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் உள்ள ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணையினை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்பு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

120 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணையை பள்ளி உரிமயாளர்களிடம் வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏரி, குளங்கள் சீரமைக்கப்பட்டதால் மழை, வெள்ள சேதம் இல்லாமல் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும், அனைத்து துறைகளிலும் அதிமுக முன்னோடியாகத் திகழ்வதாகவும் தெரிவித்தார்.

'அதிமுக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்வதை யாராலும் தடுக்க முடியாது'- அமைச்சர் செங்கோட்டையன்

கிராமங்கள்தோறும் மருத்துவ சிகிச்சை கிடைக்க ஏதுவாக இரண்டாயிரம் மினி சிகிச்சை மையங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்ததை குறிப்பிட்ட அவர், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்துவருவதாகவும், 7,700 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்விற்கு முன்னதாக, 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பொழிச்சலூர் புதிய ஊராட்சி மன்ற கட்டடத்திற்கான அடிக்கல்லை அவர் நாட்டியதோடு, கனமழையால் பாதிக்கப்பட்ட பொழிச்சலூர், அனகாபுத்தூர் ஆகிய இடங்களில் இரண்டாயிரம் பேருக்கு நிவாரண பொருள்களையும் வழங்கினார்.

இதையும் படிங்க: 'கரோனா காலத்திலும் ரூ.24,500 கோடி முதலீடு, 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு' - எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.