ETV Bharat / state

'பொறியியல் கல்லூரிகளில் பழைய கட்டணம் தான் வசூலிக்கப்படும்' - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி! - பொறியியல் கல்லூரி கட்டணம் குறித்து பேசிய அமைச்சர் பொன்முடி

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கு சென்ற ஆண்டு வசூலித்த, அதே பழைய கட்டணம் தான் வசூலிக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி

author img

By

Published : May 27, 2022, 5:54 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'இந்த ஆண்டு பாலிடெக்னிக் தொழில் நுட்பக் கல்லூரி சேர்க்கை இணையவழியில் 2022ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியன்று தொடங்கப்படவுள்ளது. அதன் அட்டவணை இன்று (மே 27) வெளியிடப்படவுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள், பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

10 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை, மதுரை, திருச்சி, கரூர், நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது 13 கல்லூரிகளில் முதலாவதாக புதிய பாடத்திட்டங்கள் தொடங்க இருப்பதாகவும் கூறினார். மேலும், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக விரைவில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

புதிய கல்விக்கொள்கை அவசியமில்லை: ஆன்லைன் மூலமாக விண்ணபிக்க அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி படிப்பு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக்காலத்திலேயே கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார். தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை அவசியமில்லை, தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கையை உருவாக்க குழுவினை முதலமைச்சர் ஸ்டாலின் அமைத்துள்ளார் என்றார். நுழைவுத்தேர்வினை மத்திய கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்களான 22 பல்கலைக்கழகங்களே ஏற்றுக்கொள்ளமாட்டோம் என உறுதியாக கூறினர்.

கல்வியினை மாநிலப் பட்டியலில் கொண்டுவரவேண்டும் என்பதைத்தான் முதலமைச்சர் கூறியுள்ளார் என தெரிவித்த அவர் அவ்வாறு வந்தால் இவையெல்லாம் சரியாகிவிடும் என்றார். AICTE சொல்லி இருந்தாலும் கூட, தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கு சென்ற ஆண்டு வசூலித்த அதே பழைய கட்டணம் தான் வசூலிக்கப்படும் எனக் கூறினார். மேலும், AICTE சொல்வதைப் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “புதிய கல்விக்கொள்கையை அதி தீவிரமாக எதிர்க்கிறோம். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் இடைநிற்றல் அதிகமாகும். அது குலக்கல்வி முறையை ஆதரிக்கும். கிராமப்புற மாணவர்கள் கல்வி பெறுவதைத் தடுக்கும். எதிர்காலத்தைப் பாதிக்கும். பொறியியல் கலந்தாய்வில் கடந்த காலங்களில் நடைபெற்ற தவறுகள் நடைபெறாதவண்ணம் ஆன்லைன் வழியாக நடைபெறும். அது தான் மாணவர்களுக்கும் எளிது.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி

கூட்டாட்சியில் எதைப் பேசவேண்டுமோ அதை முதலமைச்சர் தெளிவாகப் பேசியுள்ளார். நீட் தேர்வு ரத்து, ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை உள்ளிட்டவற்றை உரிய முறையில் கேட்பதில் என்ன தவறு? பாஜகவினர் ஜால்ரா அடிப்பதற்காக எதையாவது பேசுவார்கள். வெளி நாடுகளுக்குச் செல்லும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடவைக்கிறார். பிரதமருக்கு கொடுக்கவேண்டிய மரியாதை உரிய முறையில் கொடுத்து, கேட்க வேண்டியதை முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுள்ளார்.

‘உறவுக்கு கைகொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்’ என்று தெளிவாகச் சொல்லியுள்ளார். கட்சியை வளர்க்க குறைசொல்கிறார்கள். இவர்களுக்கு தமிழ்நாட்டினை வளர்க்கும் எண்ணம் இல்லை. தமிழ்நாட்டு நலனுக்காக உழைப்பவர், நம் முதலமைச்சர், தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் என்ன தேவையோ அதை தான் புள்ளி விவரங்களோடு சொல்லியிருக்கிறார்” என்றார்.

இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.