சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா இன்று (நவ.8) சைதாப்பேட்டையில் உள்ள வளாகத்தில் நடைபெற்றது. இந்த தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்கவில்லை.
முன்னதாக, கடந்த நவம்பர் 2ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பதாக அறிவித்தார். தற்போது தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மேலும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்து முதல் இடங்களைப் பெற்ற 45 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக பட்டங்களை வழங்கினார்.
தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சோ.ஆறுமுகம், அனைவரையும் வரவேற்று தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழத்தின் வளர்ச்சி ஆண்டறிக்கையைச் சமர்பித்தார். பின், 14வது பட்டமளிப்பு விழாவில் 9,776 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இதில் 3,318 முதுகலைப் பட்டதாரிகள், 5,302 இளங்கலை பட்டதாரிகள், 1,042 தொழில் கல்வி பட்டயதாரிகள், 82 பட்டய பட்டதாரிகள், 24 முனைவர் பட்டம் பெற்றவர்கள் மற்றும் 8 எம்.பில் பட்டதாரிகள், இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றனர். அவர்களில் 485 முதல் தகுதி பெற்ற பட்டதாரிகள் பதக்கங்களை நேரில் பெற்றுக் கொண்டனர்.
கனடாவின் வான்கூவரில் உள்ள காமன்வெல்த் கல்வி ஊடக மையத்தின் துணை நிறுவனம், ஆசியாவிற்கான காமன்வெல்த் கல்வி ஊடக மையம் வழங்கிய அங்கீகாரம் இந்த பட்டமளிப்பு விழாவில் மிகவும் பாராட்டத்தகுந்த ஒன்றாகும். தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்த செயல்திறனுக்காக என்.மேனகா என்ற மாணவிக்கு ரூ.25,000 ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மேலும் கே.பி.ஆர் அறக்கட்டளை விருதுகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளக்கிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்திய தேசிய அறிவியல் தொழில்நுட்ப கழக அமைச்சகததின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையில் புகழ் பெற்ற நிபுணருமான முன்னாள் செயலாளர் அசதோஷ் சர்மா பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதையும் படிங்க: “ஒரு காசு கூட கைப்பற்றவில்லை” - அமைச்சர் எ.வ.வேலு கண்ணீர் மல்க பேட்டி!