ஆவடி மாநகராட்சியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் 36 எம்எல்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர் கே. பாண்டியராஜன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து திருமுல்லைவாயல் சிவன் கோயில், நாகம்மை நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மேல்நிலை தொட்டியில் நீர் கொள்ளவு மற்றும் நீர் ஏற்ற ஆய்வு செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஆவடி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சோழவரத்திலிருந்து 10 எம்எல்எடி குடிநீர் ஆவடி மாநகராட்சிக்கு கொண்டு வரும் பணியிலும் அரசு ஈடுபட்டுள்ளது. பணிகள் முடிவுற்றதும் நவம்பர் மாதத்திற்குள் ஆவடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: ஆவடி, சாலையில் ஓடும் கழிவுநீரால் தொற்று பரவும் அபாயம்!