ETV Bharat / state

பத்திரப்பதிவுத்துறையில் விரைவில் '3.0 சர்வர்'- அமைச்சர் மூர்த்தி தகவல்! - 3 0 server internet Facility in

போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த 10,555 மனுக்கள் மீது இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதில், 959 ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பத்திரப் பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 27, 2023, 7:19 PM IST

அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்யப்பட்ட 10,555 மனுக்கள் மீது இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டதோடு அதில், 959 ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பத்திரப் பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பத்திர பதிவுத்துறை சார்பில் கருத்து கேட்புக் கூட்டம் இன்று (ஜூலை 27) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட கூடிய சங்க நிர்வாகிகள், ரியல் எஸ்டேட் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, "கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட ரியல் எஸ்டேட் பிரமுகர் அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர் என்றார். பதிவுத்துறையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் சென்ற ஆண்டு 2022-23-ல் ரூ.17,298.67 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முறைகேடான 959 பத்திர பதிவு ஆவணங்கள் ரத்து: போலி ஆவணங்களை ரத்து செய்ய புதிய சட்டம் இயற்றப்பட்டு மாநிலம் முழுவதும் 10,555 மனுக்கள் மீது இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 959 ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். தமிழகத்தில் இயற்றப்பட்ட 'போலி ஆவணங்களை ரத்து செய்யும் பதிவு சட்டம் பிரிவு 77A'-யை (Section 77 A of the Registration Act) பின்பற்றி மற்ற மாநிலங்களும் இச்சட்டத்தை இயற்றும் முனைப்பில் உள்ளன என்றார். பதிவுத்துறையில் மக்களின் நலனுக்காக செங்கல்பட்டு மற்றும் ராமநாதபுரம் ஆகிய இரண்டு புதிய மண்டலங்கள் மற்றும் ஆறு பதிவு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

பதிவுத்துறையில் 2021-22 ஆண்டில் 23 அலுவலகங்களுக்கும், 2022-23 ஆண்டில் 15 அலுவலகங்களுக்கும் ஆக மொத்தம் 38 அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர் ஆள்மாறாட்டத்தை அறவே ஒழித்திட ஆதார் தரவுடன் விரல்ரேகை மற்றும் கருவிழிப் படலம் சரிபார்க்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

வீட்டிலிருந்தே இணையவழி பத்திர பதிவு முறை: 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வரிசையாக காத்திருக்காமல் பத்திரப்பதிவு மேற்கொள்ள முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் உரிமை ஆவணம், ஒப்படைப்பு ஆவணம், ரசீது ஆவணம், குடியிருப்புக்கான 5 வருடங்களுக்கு உட்பட்ட குத்தகை ஆவணம் ஆகியவற்றை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லாமல் வங்கி மற்றும் வீட்டில் இருந்த படியே பதிவு மேற்கொள்ள இணையவழி பதிவு முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

கணினியில் ஆவணங்களை திருத்தம் செய்ய இயலாத வகையில் நம்பிக்கை இணையம் என்ற பிளாக் செயின் (Black Chain) தொழில்நுட்ப வசதி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் மூர்த்தி, பெறப்பட்ட கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இக்கூட்டத்தில் கட்டடங்கள் மற்றும் நிலங்களுக்கு சந்தை மதிப்பில் பொது அதிகார கட்டணம் ஒரு சதவீதம் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பத்திரப்பதிவுத்துறையில் விரைவில் 3.0 சர்வர் இணையம்: கிராம நத்தம் 3-லிருந்து 5 சென்ட் நிலங்கள் பத்திரப்பதிவு செய்வதற்காக ஆட்சேபனை கிடையாது எனக் கூறிய அவர், 2012-ல் என்ன நடைமுறை இருந்தத நடைமுறையே தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது என்றார். இந்தியாவிலே பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் பதிவு கட்டணம் குறைவாக வசூலிக்கபடுகிறது எனவும் பத்திர பதிவு இணையதள சர்வர் 2.0 கொள்ளளவை காட்டிலும் தற்போது பதியப்படக்கூடிய பத்திரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பத்தாலும் முகூர்த்த நேரங்களில் அதிக அளவு பத்திரங்கள் சர்வர் பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால், விரைவில் 3.0 சர்வர் கொண்டுவர உள்ளோம் என கூறினார். இதில் பத்திரப்பதிவில் பல்வேறு இவை அமுல் செய்யப்பட்ட பிறகு சர்வர் கோளாறுகள் சரிசெய்யபடும் என்றார்.

இதையும் படிங்க: தஞ்சையில் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பப்பதிவு முகாமில் முதலமைச்சர் திடீர் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.