ETV Bharat / state

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை குறை கூறிய அமைச்சர் துரைமுருகன்! - Minister durai murugan byte

Cauvery Regulation Committee meeting: நீர் தட்டுப்பாடு உள்ள நேரத்தில் நீரை எவ்வாறு பங்கிட்டு கொள்ள வேண்டும் என்ற வரையறை உருவாக்காமல் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மெத்தனமாக செயல்படுவதாக அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மெத்தனமாக செயல்படுகிறது - அமைச்சர் துரைமுருகன் சாடல்!
minister-durai-murugan-says-cauvery-water-management-authority-acts-slowly
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 7:11 PM IST

சென்னை: காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கோட்டூர்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நேற்றைய காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி பயிர்களைக் காப்பாற்ற விநாடிக்கு 24000 கன அடி நீர் வீதம் 10 நாட்களுக்குத் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால், கர்நாடக அரசு 5000 கன அடி நீர் 15 நாட்களுக்குத் திறப்பதாக நிர்ணயித்துள்ளது. இன்று நடைபெறக்கூடிய கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை எடுத்துரைக்கவுள்ளதாகவும், மேலும் 24,000 கன அடி நீர் திறந்துவிட்டால் தான் பயிர்களைக் காக்க முடியும் என்பதை அழுத்தமான கோரிக்கையாக வைக்க உள்ளோம். ஆனால், காவிரி ஒழுங்கு முறை ஆணையம் 7000 கன அடி நீர் திறக்க பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசின் தரப்பு தேவையை வலியுறுத்துவோம். இப்போது நமக்குத் தேவையானது பயிரை காப்பாற்றுவதற்கான உயிர் நீர் அது நமக்குக் கிடைத்தால் போதும். பருவ மழை இல்லாமல் போனால் தண்ணீர் இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், நீர் அதிகம் இருக்கும் போது தமிழ்நாட்டிற்கு எவ்வளவு நீர் வழங்க வேண்டும் என்பதை வரையறுத்துள்ளனர்.

அதாவது, காவிரி நீர் அதிகம் இருக்கும் போது எவ்வாறு பங்கீடு செய்ய வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. நீர் தட்டுப்பாடு உள்ள நேரத்தில் நீரை எவ்வாறு பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்ற வரையறை இல்லை. இவ்விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மெத்தனமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். இதனையும் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் எடுத்து வைக்க இருப்பதாகவும் தெரிவித்தார். பயிர் பாதிக்கப்பட்டால் மாற்று ஏற்பாடாக விவசாயிகளுக்குக் காப்பீடு ஆகியவற்றின் மூலம் இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

நீர் பற்றாக்குறை காலத்தில் நீரை எப்படிப் பங்கிட்டுக் கொள்வது என்பதைக் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆய்வு செய்து பங்கிட்டு அளிக்க வேண்டும். ஆனால், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அப்படி நடந்து கொள்ளவில்லை பலமுறை இது குறித்துக் கேட்டபோதும் பதில் இல்லாத காரணத்தினால் தான் அதையும் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேகமாக சரியும் பவானிசாகர் அணை நீர்மட்டம்: நீர்வரத்து 352 கன அடி: நீர் திறப்பு 3400 கன அடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.