சென்னை: மாமல்லபுரத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு இல்லம், தொழிலாளர் நல பிரதிநிதிகள் தங்கி பயன்பெற்று வரும் ஜீவா இல்லம் ஆகியவற்றை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் இன்று (ஜூலை.6) ஆய்வு மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து நடந்த தொழிலாளர் நலவாரிய கருத்தரங்கு கூட்டத்தில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையேற்றார். இதில் குறைந்தபட்ச ஊதிய சட்டம், வேலையாள் இழப்பு சட்டம், பணிக்கொடை சட்டம், நிலுவையில் உள்ள பணியாளர்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை, பாடநூல் உதவித்தொகை, திருமண உதவித் தொகை, விபத்து மரணம், இயற்கை மரணம், ஈம சடங்கு உதவித் தொகை விரைவாக சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய மனுக்களை விரைவில் தீர்க்க வேண்டும் என்றார்.
இதில் தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை அரசு செயலாளர் கிர்லோஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'ஆதிதிராவிடர் நல நிதியை திமுக வீணடிக்காது'- அமைச்சர் கயல்விழி