ETV Bharat / state

தேசிய அளவிலான யோகா போட்டியில் சாதித்த தமிழக மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து! - உடற்கல்வி

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டியில் பதக்கங்களை வென்று, தமிழ்நாட்டிற்கு இரண்டாம் இடத்தை பெற்று தந்த மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்தார்.

minister-congratulates-students-of-tamil-nadu-who-achieved-national-level-yoga-competition
தேசிய அளவிலான யோகா போட்டியில் சாதித்த தமிழ்நாடு மாணவர்கள் -வாழ்த்திய அமைச்சர்
author img

By

Published : Jun 23, 2023, 9:12 PM IST

சென்னை: நாடு முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தேசிய அளவில் கிரிக்கெட், டென்னிஸ், நீச்சல், கேரம், சதுரங்கம், ஹாக்கி, கபடி உள்ளிட்ட 32 விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இவற்றில் மாநில அளவிலான போட்டிகளில் தகுதி பெற்றவர்களைத் தேசிய போட்டிகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் தேர்வு செய்து அனுப்புகின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கையில் முன்னுரிமை உட்பட பல்வேறு சலுகை வழங்கப்படுகிறது.

இருப்பினும் கடந்த முறை தமிழக மாணவர்கள் ஒருவர் கூட தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது இதற்கு கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையில் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தீவிர கவனம் செலுத்தப்பட்டது. தேசிய அளவில் நடைபெறும் யோகா ஒலிம்பியாட் போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொள்ளத் தேர்வு செய்ய வேண்டும் என உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

இதனையடுத்து ,மாநில அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் சிறந்து விளங்கிய மாணவர்களை பள்ளிக்கல்வித்துறையால் தேர்வு செய்து. மத்தியப் பிரதேசத்தில் தேசிய அளவில் நடை பெற்ற யோகா போட்டியில் தமிழ்நாடு ஒலிம்பியட் மாணவ மாணவிகள் அணி, கடந்த ஜூன் 18,19,20 ஆகிய தேதிகளில் பங்கேற்றனர்.

ஒவ்வொரு பிரிவிலும் 4 மாணவர்கள் வீதம் 4 குழுக்களாக 16 மாணவர்கள் பங்கேற்று தேசிய அளவிலான யோகா போட்டியிலும் வெற்றி பெற்று சாதனைப் புரிந்துள்ளனர். இப்போட்டியில் 16 வயதுக்குட்பட்ட போட்டியில், 4 மாணவர்கள் வெள்ளிப்பதக்கத்தையும் , 4 மாணவிகள் வெண்கலப்பதக்கத்தையும் வெற்றுள்ளனர்.மேலும் 14 வயதுக்குட்பட்ட போட்டியில் 4 மாணவர்கள் வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளனர்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலிலிருந்து தமிழ்நாடு வந்த மாணவர்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பதக்கங்களை வென்று, தேசிய அளவில் தமிழ்நாட்டிற்கு இரண்டாம் இடத்தை பெற்றுத் தந்த மாணவர்களுக்கு, தனது சொந்த செலவில் யோகா மேட் வழங்கியும், பயிற்சியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கியும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டில் முதன்முறையாக மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. தேசிய, உலகளவிலான போட்டிகளில் கவனம் செலுத்துவது, உடற்கல்வி கால அட்டவணை தயாரிப்பது, விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான இலவச பேருந்து பயணங்கள் தொடர்பாகத் தனது கருத்துகளை எடுத்துரைத்தார்.

புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து,வரும் கல்வியாண்டில் குறுவட்டம் முதல் மாநில அளவு வரை நடைபெறவிருக்கும் விளையாட்டுப் போட்டிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், விவாதிக்கப்பட்டது இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க :Bus Driver Sharmila: கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா டிஸ்மிஸ்.. பஸ் உரிமையாளர் விளக்கம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.