சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று, டி.ஆர்.பி. ராஜா, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என கேரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, "திருச்சி, தஞ்சாவூர், கரூர், புதுக்கோட்டை பெரம்பலூர், பெரம்பலூர், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரடி நெல் கொள்முதல் இடங்களுக்கு மற்றும் உணவு துறை சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினோம்.
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் 2,508 பேர் உள்ளனர். இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் வழங்கும் விவசாயிகளுக்கு ஐந்து அல்லது ஆறு நாட்களாக பிறகுதான் பணம் வருவதாக தெரிவித்தனர்.
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணத்தை முதலமைச்சர் உத்தரவின் படி உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. இதுவரை விவசாயிகளுக்கு 154 கோடியே 73 லட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ஒன்றிய அரசு தான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாஸ் பதில்