ETV Bharat / state

வீடு திரும்பிய அமைச்சர் அன்பழகன்!

author img

By

Published : Jul 15, 2020, 3:50 PM IST

சென்னை: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த அமைச்சர் அன்பழகன் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

minister anbazhagan cured from corona and returning home

தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன். இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, சமூக வலைதளங்களில் இவரது உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் உலவி வந்தன. வதந்திகளை தவிர்க்கும் பொருட்டு. அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருந்துவமனை நிர்வாகம், அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது.

அதில், “ அமைச்சர் அன்பழகன் நலமாக உள்ளதாகவும், அவர் விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்புவார் என்று தெரிவித்தது. இந்நிலையில், அவர் இன்று (ஜூலை 15) கரோனா தொற்று பாதிப்பிலிருந்து முற்றிலும் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.