ETV Bharat / state

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் எம்பி கௌதம சிகாமணி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு! - District news in tamil

Illegal money transfer case: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யுமான கௌதம சிகாமணி உள்ளிட்ட 5 பேர் நேரில் ஆஜராக சென்னை சிறப்பு அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mhc special court order to minister ponmudi son Gautham Sigamani appear on illegal money transfer case
அதிக அளவு செம்மண் எடுத்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மகன் கௌதம சிகாமணி எம்.பி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 5:40 PM IST

சென்னை: கடந்த 2006 - 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், தமிழக அரசின் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூபாய் 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012ல் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூலை மாதம் சோதனை நடத்தினர். சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனைகளைத் தொடர்ந்து, அமைச்சர் பொன்முடியும், சென்னையிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

செம்மண் முறைகேடு தொடர்பாகக் கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், சோதனையின் முடிவில், முக்கிய ஆவணங்களும், ரூபாய் 13 லட்சம் மதிப்பிலான பிரிட்டன் பவுண்டுகள் உள்பட ரூபாய் 81 லட்சத்து 70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூபாய் 41 கோடியே 90 லட்சம் வங்கி நிரந்தர வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.

இந்தச் சூழ்நிலையில், இந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக, அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி, அவரது உறவினர் கே.எஸ். ராஜமகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே.சதானந்தம், கோபிநாத், கே.எஸ்.பிஸ்னஸ் ஹவுஸ் நிறுவனம் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த குற்றப்பத்திரிகை எண்ணிடப்பட்டு, கோப்புக்கு எடுத்த முதன்மை அமர்வு நீதிபதி அல்லி, இந்த வழக்கை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த வழக்கு சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கௌதம சிகாமணி, கே.எஸ்.ராஜமகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே.சதானந்தம், கோபிநாத் ஆகியோர் நேரில் ஆஜராகச் சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை டிசம்பர் 24-ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: அதிமுக கொடி, சின்னத்தைப் பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.