ETV Bharat / state

சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய முடியாது.. நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறிய காரணம் என்ன? - நேரடி ஒளிபரப்பு

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யக்கோரி வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாது எனத் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு: சராமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 10:46 PM IST

சென்னை: சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யக்கோரி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் தேமுதிக விஜயகாந்த் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். அதில் சட்டமன்ற நிகழ்வுகள் பகுதி பகுதியாக ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும், மற்ற அரசியல் கட்சி உறுப்பினர்களின் பேச்சுக்களை முழுமையாக ஒளிபரப்பு செய்யாமல், பாரபட்சம் காட்டுவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (அக்.18) விசாரணைக்கு வந்தது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மக்களவை, மாநிலங்களவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் நிலையில், டிஜிட்டல் யுகத்தில் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன சிக்கல் உள்ளது? எனக் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்வது சாத்தியமற்றது எனவும், சில நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும் விளக்கமளித்தார்.

அப்போது அதிமுக கொறடா வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், நாடு முழுவதும் சட்டமன்றங்களின் நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய 'தேசிய இ விதான்' என்ற திட்டம் துவங்கப்பட்டு, அதற்காக 463 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இத்தனை செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளதானால் இது முற்றிலும் சாத்தியமே என்று வாதிட்டார்.

இதையடுத்து, சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக ஒளிபரப்பு செய்யும்படி சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாகத் தீர்ப்பு நகல்களைத் தாக்கல் செய்ய வேலுமணி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதையடுத்து, விசாரணையை நீதிபதிகள் நவம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: அஜித்தை வைத்து படம் இயக்குவது என்னுடைய மிகப்பெரிய ஆசை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.