ETV Bharat / state

அதிமுக பொதுக்குழு கூட்ட வன்முறை: எடப்பாடி பழனிசாமி மீது முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! - All State News in Tamil

AIADMK office ransacking: அதிமுக பொதுக்குழு நடைபெற்ற போது கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது அளிக்கப்பட்ட புகாரில் விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி போலிசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mhc-ordered-directs-cbcid-actions-against-eps-if-found-prima-facie-on-admk-office-ransacking
அதிமுக பொதுக்குழு கூட்ட வன்முறை: எடப்பாடி பழனிசாமி மீது முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க உத்தரவு!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 10:58 PM IST

சென்னை: அதிமுக பொதுக்குழு நடைபெற்ற போது கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது அளிக்கப்பட்ட புகாரில் விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் புகுந்த ஒபிஎஸ் தரப்பினர் அலுவலகத்திலிருந்த சொத்து ஆவணங்கள், வாகனங்களின் பதிவு புத்தகங்கள், கணினி உள்ளிட்டவற்றைச் சூறையாடிச் சென்றதாக, இபிஎஸ் தரப்பில் அளித்த புகாரில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதேபோல், அன்றைய தினம் அதிமுக அலுவலகம் சென்ற தங்களை எடப்பாடி பழனிசாமி அறிவுரையின் பேரில் குண்டர்கள் தாக்கியதாக ஒ.பி.எஸ். ஆதரவாளரான ஜே.சி.டி. பிரபாகர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், எடப்பாடி பழனிசாமி, சி.வி. சண்முகம், தி.நகர் சத்தியா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியிருந்தார்.

இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி ஜே.சி.டி. பிரபாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஜே.சி.டி. பிரபாகர் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் இரண்டு வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சிபிசிஐடி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ரூ.4,500 கோடி மணல் கொள்ளை வழக்கில் உயர் நீதிமன்றத்தில் நடந்த காரசார வாதம் - முழு விவரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.