ETV Bharat / state

கோயம்பேட்டில் 10.5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு! பாஷ்யம் நிறுவனம் மனு தள்ளுபடி! நீதிபதி கூறியது என்ன? - todays news in tamil

koyambedu Goverment land encroachment: கோயம்பேட்டில் கடந்த ஆட்சியின் போது பாஷ்யம் நிறுவனத்திற்கு குறைந்த விலையில் விற்கபட்ட 10.5 ஏக்கர் நிலத்தை மீட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு அரசு பயன்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

1000 கோடி மதிப்பிலான அரசு நிலம் அபகரிப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 9:05 AM IST

சென்னை: அரசு நிலங்கள் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதை தடுக்க தகுந்த சட்டத்தை இயற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கோயம்பேட்டை ஒட்டி இருக்கும் அமைந்தகரை தாலுகா, பூந்தமல்லி சாலையில் அரசுக்கு சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற நிறுவனத்துக்கு சதுர அடி 13 ஆயிரத்து 500 ரூபாய் என்ற விலையில் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விற்பனை செய்ததாக அரசாணை பிறப்பித்தது.

இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து, 2022ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி திருத்திய அரசாணை தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து பாஷ்யம் நிறுவனம் தரப்பில் சரவண பவன் ஓட்டல் பங்குதாரர் ஆர்.சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று (செப். 25) விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், இரு தரப்பு வாதங்களையும் கேட்டு மனுதாரர் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அளித்த பதில் வருமாறு, "அரசு புறம்போக்கு கிராம நத்தம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம் ரூ.1,575 கோடி செலவில் வணிக வளாகம் கட்டி வருகிறது. அரசு நிலம் தனியார் வர்த்தக பயன்பாட்டுக்கு சட்டவிரோதமாக தந்ததை சட்ட ரீதியாக ஏற்க முடியாது.

கிராம நத்தம் இடத்திற்கு அரசுதான் பாதுகாவலர். அரசுக்கு சொந்தமான சொத்துக்களை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்வது வியப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதில் ஒட்டுமொத்த பணம் படைத்த அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள் பங்கு வகித்துள்ளனர்.

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்தான் இந்த சட்ட விரோத செயல்களை செய்துள்ளனர். ஒவ்வொரு கட்சியை சேர்ந்தவர்களும் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இதேபோல் செயல்படுவது வாடிக்கையாக உள்ளது. அந்த நிலத்தை முழுமையாக மீட்டு, வேலி அமைத்து, பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்.

அதிக மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரிக்க உடந்தையாக செயல்பட்ட அரசு ஊழியர்கள், பொது ஊழியர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற கட்டமைப்பு ஊழல் அனைத்து வகைகளிலும் சமூக சாத்தான் போல் பரவி வருகிறது. குறிப்பாக அரசு நிலத்தை வேறு பணிகளுக்கு மாற்றம் செய்வதில் வெளிப்படையான நடைமுறைகள் இல்லை.

எனவே, அரசு நிலங்கள் அபகரிப்பு, ஆக்கிரமிப்பை தடுக்கவும் ஆக்கிரமிப்பாளர்களை தண்டிக்கவும் சிறப்பு சட்டம் கொண்டு வரப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அரசியல்வாதிகள் அதிகாரிகளுடன் சேர்ந்து இதுபோன்ற சட்டவிரோத செயல்களை செய்து வருகிறார்கள். அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அபகரிக்கப்பட்ட அரசு நிலங்களை அடையாளம் காணவும், அரசு நிலங்கள் சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்தது குறித்தும், குத்தகை பாக்கியை வசூலிப்பது குறித்தும் ஆய்வு செய்ய உயர்மட்ட குழுவை அரசு அமைக்க வேண்டும். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. அரசு நிலத்தை மீட்டு அந்த நிலத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்பி அந்த நிலத்தை பொது மக்களின் பயன்பாட்டுக்கு அரசு பயன்படுத்த வேண்டும்" என்று கூறி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: TET-2013 ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்! காவல் துறை வைத்த செக்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.