ETV Bharat / state

அரசு சொத்துக்களின் வாடகை பாக்கி; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு - who do not collect rent arrears

குத்தகைக்கு விடப்படும் அரசு சொத்துக்களின் வாடகை பாக்கியை வசூலிக்கத் தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High court
சென்னை உயர்நீதி மன்றம்
author img

By

Published : Jun 10, 2023, 7:41 PM IST

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பிரதான சாலையில் அரசுக்கு சொந்தமான வணிக வளாகம் சேதமடைந்த நிலையில் இருந்ததால், அதை இடித்துவிட்டு புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அந்த வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து அங்கு கடை நடத்தி வந்த அஷ்வக் அகமது, பவன்குமார் ஜெயின் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இது குறித்து அவர்கள் தொடுத்த மனுவில், 'கட்டடம் சேதமடையவில்லை எனவும், முறையாக வாடகை செலுத்தி வருவதால், காலி செய்யக் கூறி அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும்' எனவும் கோரப்பட்டது. இந்த மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று (ஜூன் 10) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓசூர் சார் ஆட்சியர் தரப்பில், மனுதாரர்கள் இருவரும் எந்த உரிமமும் இல்லாமல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக கடை நடத்தி வருவதாகவும், முறையாக வாடகை செலுத்துவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கட்டடம் சேதமடைந்துள்ள நிலையில், கடையை தொடர்ந்து நடத்த அனுமதிப்பது ஆலோசனைக்கு உரியதல்ல எனவும், மனுதாரர்கள் இருவரும் சட்டவிரோதமாக 30 ஆண்டுகள் குறைவான வாடகையில் கடைகளை நடத்தி வருவதால், சார் ஆட்சியர் காலி செய்ய வேண்டும் என பிறப்பித்த நோட்டீஸில் எந்த பிழையும் இல்லை எனக் கூறி, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவு பிறிப்பிக்கப்பட்ட 2 மாதத்தில், மனுதாரர் அந்த இடத்தை காலி செய்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தவறினால் அரசு, மனுதாரரை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்தனர். மேலும், அரசு வருவாயை பாதுகாக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை எனத் தெரிவித்த நீதிபதி, குத்தகை சொத்துக்களின் வாடகை பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வழக்கறிஞர்கள் தவறான பாதையில் செல்லக்கூடாது - நீதியரசர் சுப்பிரமணியன் அட்வைஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.