இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெ. தீபா கூறுகையில், எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தேன். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுவந்தது.
நாடாளுமன்ற, சட்டப்பேரவை இடைதேர்தல்களில் எங்கள் பேரவை அளித்த ஆதரவை அதிகமுக நிர்வாகிகளே தெரிவித்துள்ளனர். தனக்குப்பின் அதிமுக நிலைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாகவே அதிகமுகவுடன் இணைகிறோம்.
மேலும் கூறிய அவர், அதிமுகவில் எந்த பொறுப்பையும் நான் கேட்கவில்லை. நிபந்தனையற்ற ஆதரவுடனே இணைகிறோம். இன்று தான் கடிதம் கொடுத்திருக்கிறோம். அதிமுக தலைவர்களின் முடிவுகளை எதிர்பார்த்திருக்கிறோம் என்று கூறினார்.