சென்னை ராயபுரத்தில் ராபின்சன் பூங்காவில் தேசிய ஆண்கள் முன்னணி அமைப்பினர் ஒன்று சேர்ந்து உலக ஆண்கள் தினம் கொண்டாடினர். அப்போது, அவர்கள் ஆண்கள் பாதுகாப்பு குறித்து கோஷங்களை எழுப்பினர். இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கே. ராஜன் தலைமையில் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.
இதில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை பெண்கள் ஆண்கள் மீது தவறாக கொடுக்கும் புகார்களை விசாரிக்காமல், ஆண்கள் மீது நடவடிக்கை எடுப்பதனால் 15 லட்சத்திற்கு மேல் ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி சிலர் காணாமல் போயிருப்பதாகவும், சிலர் பலவிதப் கொடுமைகளை அனுபவித்துவருவதாகவும் தெரிவித்தனர். அதனால் சட்டரீதியாக இந்த பிரச்னைகளை மேற்கொள்வதற்கு தேசிய ஆண்கள் பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.
இதையும் படிங்க...கோயிலை அகற்றியதால் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் !