சென்னை: இந்திய இராணுவத்தில் லெப்டினன்ட் ஆக பணிபுரிந்து தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில், தனது இன்னுயிரை தியாகம் செய்த பார்த்திபனை கௌரவிக்கும் வகையில், அன்னார் வசித்து வந்த புளியங்குடி நகராட்சிக்குட்பட்ட சிந்தாமணி பகுதி மேலரத வீதியினை “லெப்டினன்ட் பார்த்திபன் தெரு” என பெயர் மாற்றம் செய்து தீர்மானம் நிறைவேற்றிட புளியங்குடி நகராட்சிக்கு அனுமதி வழங்கி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
லெப்டினன்ட் பார்த்திபன்:
லெப்டினன்ட் பார்த்திபன், சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்தவர்கள் மேஜர் நடராஜன், தமிழ்செல்வி இவர்களது பெற்றோர் ஆவர். பார்த்திபன், தனது 23 ஆவது வயதில் ராணுவத்தில் சேர்ந்து ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பாதுகாப்பு படையில் பணியாற்றினார்.

பார்த்திபன், சென்னையிலுள்ள Officers Training Academy (OTA) யிலிருந்து பட்டம் பெற்றவர். ஜம்மு காஷ்மீரில் 5 JAK LI (Light Infantry) ரெஜிமெண்டில் சேவை புரிந்தவர். அவரது தந்தையார் நடராஜன் இந்திய ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கீர்த்தி சக்ரா விருது: காஷ்மீர் எல்லையில் 2006ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாளன்று, 12 பேர் கொண்ட தீவிரவாதக் குழு ஊடுருவியதைத் தடுத்த, லெப்டினன்ட் பார்த்திபன் தீவிரவாதிகள் அவரை சுட்ட போதும், கடைசி மூச்சு வரை போராடி 5 தீவிரவாதிகளை கொன்று, தீவிரவாத குழுவை ஊடுருவலைத் தடுத்து நிறுத்தி வீரமரணம் அடைந்தார்.

அவரது ஈடு இணையற்ற தியாகம், வீரம், தலைமைப் பண்பு காரணமாக ராணுவம் அவருக்கு ‘கீர்த்தி சக்ரா' விருது அளித்து கவுரவித்தது. மேலும், ராணுவத்தில் சேர்ந்து 6 மாதங்களே ஆன நிலையில் பார்த்திபன் வீரமரணம் அடைந்தார்.
அவரின் நினைவாக, பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சிமையத்தில் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது. அனகாபுத்தூர், பல்லாவரத்தில் ஒரு தெருவுக்கு அவரின் பெயர் வைக்கப்பட்டது.
இந்நிலையில் லெப்டினன்ட் பார்த்திபனை கௌரவிக்கும் வகையில், அன்னார் வசித்து வந்த புளியங்குடி நகராட்சிக்குட்பட்ட சிந்தாமணி பகுதி மேலரத வீதியினை “லெப்டினன்ட் பார்த்திபன் தெரு” எனப் பெயர் மாற்றம் செய்து தீர்மானம் நிறைவேற்றிட புளியங்குடி நகராட்சிக்கு அனுமதி வழங்கி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதுகலைப் பொறியியல் நுழைவுத்தேர்வு - உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்!