ETV Bharat / state

RTE Admission 2023: நாளை தான் கடைசி நாள்.. கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் விண்ணப்பிக்க முந்துங்கள் பெற்றோர்களே..! - பள்ளிக்கல்வித்துறை

2023-24ம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்றும், இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 872 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

TamilNadu
கல்வி
author img

By

Published : May 17, 2023, 7:42 PM IST

சென்னை: ஆண்டுதோறும் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, அனைத்து தனியார், சுயநிதி பள்ளிகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2023-24ஆம் கல்வி ஆண்டில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியோரின் குழந்தைகளுக்கு சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. சிறுபான்மையற்ற தனியார், சுயநிதி பள்ளிகளில் எல்கேஜி வகுப்பிலும், ஒன்றாம் வகுப்பு முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் முதல் வகுப்பிலும் இடங்கள் வழங்கப்படுகின்றன.

இந்த சேர்க்கை கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்கியது. rte.tnschool.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இன்று (மே. 17) வரையில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 668 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். அதில், ஒரு சிலர் ஓரிரு முறைகள் பதிவு செய்துள்ளனர். எனவே, இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 872 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டாய கல்வி உரிமைச் சட்ட இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க நாளை(மே.18) கடைசி நாள்.

இதில் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான விண்ணப்பங்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விபரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களும் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பகலையிலும் வரும் 21ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

ஒதுக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மே 23ஆம் தேதி குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்படுவார்கள். அதில், தேர்வு செய்யப்பட்ட குழந்தையின் பெயர், பட்டியல் விண்ணப்பத்துடன் 24ஆம் தேதி இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பள்ளிகளிலும் வெளியிடப்படும்.

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை மே 29ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2022-23ஆம் கல்வியாண்டில், 1 லட்சத்து 42 ஆயிரத்து 186 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்திருந்தனர்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க நாளை கடைசி என்ற சூழலில், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் தொடர்பாக வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

கடந்த 2009ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டப்படி, அனைத்து தனியார் பள்ளிகளும், 25 சதவீத இடங்களில் பின் தங்கிய குழந்தைகளுக்கு இடம் வழங்க வேண்டும். இந்த சட்டத்தில் குறிப்பிட்ட தனியார் பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. ஆனால், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிப்பதாக கூறி பல குழந்தைகளின் விண்ணப்பங்களை தனியார் பள்ளிகள் நிராகரித்துள்ளதாகவும், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் குழந்தைகள், ஆன்லைனில் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க கோரி, கோவையைச் சேர்ந்த முத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவர்கள் குறித்த விவரங்களை மனுதாரர் வழங்கவில்லை எனவும் அரசுத்தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், முழுமையான விவரங்கள் இல்லாத நிலையில் பொதுப்படையாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என மறுத்துவிட்டனர். மேலும், சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தால் பரிசீலிக்கப்படும் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: நீலகிரி ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.